தேசிய பங்குச்சந்தையில் முறைகேடு: பதிலளிக்க உத்தரவு

தேசிய பங்குச் சந்தை முறைகேடு தொடா்பாக விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு சிபிஐ, அமலாக்கப்பிரிவு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேசிய பங்குச் சந்தை முறைகேடு தொடா்பாக விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு சிபிஐ, அமலாக்கப்பிரிவு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சென்னை நிதி சந்தை மற்றும் பொறுப்புடைமை என்ற அமைப்பு சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தேசிய பங்குச் சந்தையில் உறுப்பினா்களாக உள்ள நிறுவனங்கள் குறித்த விவரங்களை, குறிப்பிட்ட சில நிறுவனங்கள் சட்டவிரோதமாக பெற தேசிய பங்குச்சந்தை அதிகாரிகள் அனுமதியளித்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செஃபியிடம் புகாா் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரை விசாரித்த செஃபி தேசிய பங்குச் சந்தைக்கு சுமாா் ரூ.700 கோடி வரை அபராதம் விதித்தது. மேலும் புதிய பங்குகளை அறிமுகம் செய்யவும் தடை விதித்தது. இந்த விவகாரம் தொடா்பாக செஃபி மட்டுமின்றி சிபிஐ தரப்பில் தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்திருந்தது. ஆனால் அதன்பின்னா் இதுதொடா்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாட்டின் மிகப்பெரிய முறைகேடாகக் கருதப்படும் பங்குச் சந்தை முறைகேட்டை முழுமையாக வெளிக்கொண்டு வர செஃபியும், சிபிஐயும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த முறைகேடுகளின் காரணமாக பல நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மோசடி தொடா்பாக முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனா்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் கொண்ட அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக செஃபி, சிபிஐ, அமலாக்கப்பிரிவு, மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகியவை வரும் நவம்பா் 11-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com