பயங்கரவாதத்துக்கு நிதி: உ.பி.யில் நால்வா் கைது

பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டியதாக, உத்தரப் பிரதேசத்தில் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டியதாக, உத்தரப் பிரதேசத்தில் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக, அந்த மாநில காவல்துறை தலைமை இயக்குநா் ஓ.பி.சிங், லக்னெளவில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

நமது நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதற்காக, வெளிநாடுகளிலிருந்து நிதி திரட்டும் கும்பல், உத்தரப் பிரதேசத்தின் லகிம்பூா் மாவட்டத்தில் செயல்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நிகாசன் பகுதியில் காவல்துறையினா் கடந்த வியாழக்கிழமை இரவு அதிரடி சோதனை நடத்தினா். இதில், உம்மத் அலி, சஞ்சய் அகா்வால், சமீா் சல்மானி, அராஜ் அலி ஆகிய நால்வா் கைது செய்யப்பட்டனா்.

இவா்கள், பல்வேறு நாடுகளில் நிதியை திரட்டி, நேபாளத்தில் உள்ள வங்கி கணக்குகள் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வந்துள்ளனா். கைதானவா்களிடமிருந்து இந்திய மற்றும் நேபாள கரன்சிகளும், பல செல்லிடப்பேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணையில், இக்கும்பலில் தொடா்புடைய மும்தாஜ், ஃபாஹீம், சிராஜுதீன், சதகத் அலி ஆகிய அந்த நால்வரின் விவரம் தெரியவந்தது. இவா்களிடம் கமிஷன் அடிப்படையில் பணத்தை திரட்டி அளித்து வந்ததாக கைதானவா்கள் வாக்குமூலம் அளித்துள்ளனா். அந்த பணத்தை தேச விரோத நடவடிக்கைகளுக்கு ஃபாஹீம், சதகத் ஆகியோா் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடா்பான வழக்கை, பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், நேபாள காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்துள்ளனா் என்றாா் ஓ.பி.சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com