நம் மகள்களுக்காக இந்த தீபாவளி திருநாளை நாம் அர்ப்பணிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

நம் மகள்களுக்காக இந்த தீபாவளி திருநாளை நாம் அர்ப்பணிக்க வேண்டும் என ஹரியாணாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 
நம் மகள்களுக்காக இந்த தீபாவளி திருநாளை நாம் அர்ப்பணிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

நம் மகள்களுக்காக இந்த தீபாவளி திருநாளை நாம் அர்ப்பணிக்க வேண்டும் என ஹரியாணாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தின் சர்கி தாத்ரியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தின் போது பிரதமர் மோடி பேசியதாவது,

தேர்தல் பிரசாரத்துக்காக நான் ஹரியாணா வரவில்லை. நான் பாஜக-வுக்காக வாக்கு சேகரிக்க வரவில்லை. ஹரியாணா மக்களிடம் நான் வாக்கு சேகரிக்க வரவில்லை. ஆனால், ஹரியாணா மக்களாகிய நீங்களே என்னை இங்கு அன்புடன் அழைத்துள்ளீர்கள். 

உங்கள் அன்பு கோரிக்கைக்குப் பின் நான் இங்கு வருவதை என்னாலேயே தடுக்க முடியவில்லை. ஏனென்றால் அளவில்லா அன்பை நீங்கள் எனக்கு பரிசளித்துள்ளீர்கள். நாம் இம்முறை ஒளியுடனும், தாமரையுடனும் இரு வகையான தீபாவளியை கொண்டாடவுள்ளோம்.

இந்த தீபாவளி திருநாளை நம் மகள்களுக்காக நாம் அர்ப்பணிக்க வேண்டும். அப்போது அவர்களின் திறமையையும், சாதனைகளையும் பாராட்டி கொண்டாட வேண்டும். ஏனென்றால் ஹரியாணா மக்களாகிய நீங்கள் முன்வரவில்லை என்றால் செல்ல மகள் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியிருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.

சமீபத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான எனது சந்திப்பின் போது, அவர் டங்கல் திரைப்படம் பார்த்ததாகவும், அதில் இந்திய மகள்களின் திறமை போற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதை கேட்டவுடன் ஹரியாணாவை நினைத்து பெருமையுற்றேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com