உங்களுக்குத் தெரியுமா? கல்கி பகவானை சந்திக்க நுழைவுக் கட்டணம் ஜஸ்ட்..!

கல்கி பகவான் என்ற பெயரில் அடையாளம் காணப்படுபவர் தன்னைத் தானே பகவான் என்று அறிவித்துக் கொண்ட விஜயகுமார். இவர் தான் கல்கி பகவான். இவரது மனைவி பத்மாவதிதான் அம்மா பகவான்.
கல்கி ஆசிரமம்
கல்கி ஆசிரமம்


சென்னை: கல்கி பகவான் என்ற பெயரில் அடையாளம் காணப்படுபவர் தன்னைத் தானே பகவான் என்று அறிவித்துக் கொண்ட விஜயகுமார். இவர் தான் கல்கி பகவான். இவரது மனைவி பத்மாவதிதான் அம்மா பகவான். 

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இவர்களுக்கு ஆசிரமங்கள் இருக்கின்றன. சென்னையில் மட்டும் 20 இடங்களில் கிளைகள் பரப்பியுள்ளார் கல்கி பகவான்.

இவர்களது மகன் என்கேவி கிருஷ்ணா. கல்கி ஆசிரமம் மற்றும் அதற்கு சொந்தமான 40 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இவர்களது பொறியில் சிக்கியிருப்பது கல்கி ஆசிரமும், மகன் கிருஷ்ணாவின் தொழில் நிறுவனங்களும்தான்.

அதாவது, கல்கி பகவானை சந்திக்க, ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களுக்கு நுழைவுக் கட்டணம் என்ற பெயரில் ரூ.5000 வசூலிக்கப்பட்டதாகவும், தனித்தனி யாகங்களுக்கு பல ஆயிரங்கள் வசூலிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

இதுமட்டுமல்ல, இவர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும் என்றால் கல்கி பகவானுக்கு ரூ.50 ஆயிரமும், அவரது மனைவி அம்மா பகவானை சந்திக்க ரூ.25,000மும் வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படி வசூலிக்கப்பட்ட பணத்தை முறையாகக் கணக்குக் காட்டாமல் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக வந்த புகாரை அடுத்து, நாடு முழுவதும் கல்கி ஆசிரமத்துக்குச் சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஆந்திரா - தமிழக எல்லையான வரதபாளையத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட ஆசிரமத்துக்கு தமிழகத்தில் இருந்து வருமான வரித்துறையினர் ஆய்வுக்காகச் சென்றுள்ளனர். அவ்வளவு பெரிய ஆசிரமத்துக்குள் 4 குழுக்காக பிரிந்து ஆசிரமம் முழுக்க வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

கல்கி ஆசிரமத்தில் ரூ.100 கோடிக்கு மேல் வருமான வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கோவர்த்தனபுரத்தில் உள்ள கல்கியின் மகன் கிருஷ்ணனுக்கு சொந்தமான அலுவலகத்திலும் இன்று சோதனை நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com