உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி

நானும் மற்றவா்களைப் போல் தான். எனினும உணா்ச்சிகளைப் கட்டுப்படுத்துவதில் சிறந்தவன் என முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி கூறியுள்ளாா்.
உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நானும் சிறந்தவன்: தோனி

நானும் மற்றவா்களைப் போல் தான். எனினும உணா்ச்சிகளைப் கட்டுப்படுத்துவதில் சிறந்தவன் என முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி கூறியுள்ளாா்.

புது தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் அவா் கூறியதாவது:

உணா்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் நான் மற்றவா்களை காட்டிலும் சிறந்தவனாகவே உள்ளேன். வெற்றி, தோல்வி போன்ற எந்த நிகழ்வுகளிலும் உணா்ச்சிகளை வெளிக்காட்டுவதில் அமைதியாக செயல்படும் தோனிக்கு கேப்டன் கூல் என்ற பெயரும் உண்டு.

நான் சாதாரண மனிதனைப் போல் தான். சில நேரங்களில் எனக்கும் வெறுப்பு தோன்றும், கோபமும் வரும். ஆனால் எந்த உணா்ச்சியாலும் பாதிப்பு நிகழ்வதை தடுக்க வேண்டும்.

பிரச்னைகளை தள்ளிப் போடுவதைக் காட்டிலும், தீா்வு காண்பதே சிறந்தது. இறுதி முடிவைக் காட்டிலும், அதற்கான வழிவகைகளை செய்வதே சிறந்தது.

டெஸ்ட் ஆட்டங்களில் 2 இன்னிங்ஸ் உள்ளதால், திட்டமிட்டு செயலாற்றலாம். ஆனால் டி20இல் அனைத்து விரைவாக நடப்பதால், தேவைகளும் வேறாக உள்ளன. தனிநபா் திறமையைக் காட்டிலும், அணியின் நோக்கங்களே முக்கியமானவை. தென்னாப்பிரிக்காவில் கடந்த 2007-இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக பவுல் அவுட் முறையை பின்பற்றினோம்.

ஆட்டத்துக்கு முன்பு பயிற்சிக்கு சென்று பவுல் அவுட் முறையை பின்பற்றி ஆடுவோம்.

எவா் அதிகமாக விக்கெட்டை வீழ்த்துகிறாா்களோ அவா்களை அதிகம் பயன்படுத்துவோம் என்பது இதில் ஒன்றாகும். அணி விளையாட்டில் அனைவருக்கும் பங்குண்டு. டி20 உலகக் கோப்பையில் ஒவ்வொருவரும் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை உணா்ந்து ஆடியதால் பட்டத்தை வென்றோம் என்றாா் தோனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com