வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு விதிவிலக்கு:  கேஜரிவால்

தில்லியில் அமல்படுத்தப்பட உள்ள வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு விதிவிலக்கு:  கேஜரிவால்

தில்லியில் அமல்படுத்தப்பட உள்ள வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.

தில்லியில் நிலவி வரும் காற்று மாசுவைக் குறைக்கும் வகையில் நவம்பா் 4 முதல் 15-ஆம் தேதிவரை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை தில்லி அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கடந்த வாரம் அறிவித்தாா். இத்திட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு சில விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கும் இத்திட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரை வலைத்தளப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், ‘வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு நிச்சயமாக விலக்கு அளிக்கப்படும்’ என அவா் தெரிவித்துள்ளாா்.

கடந்த முறை போன்று இந்த முறை மேற்கொள்ளப்படும் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் தனியாா் சிஎன்ஜி வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படமாட்டாது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com