ஹரியாணா பேரவைத் தோ்தலில் ஜனநாயக் ஜனதா கட்சிக்கு ஆதரவு: அசோக் தன்வா்

ஹரியாணா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவா் அசோக் தன்வா் அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகிய நிலையில், அந்த மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் துஷ்யந்த்
ஹரியாணா பேரவைத் தோ்தலில் ஜனநாயக் ஜனதா கட்சிக்கு ஆதரவு: அசோக் தன்வா்

ஹரியாணா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவா் அசோக் தன்வா் அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகிய நிலையில், அந்த மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலில் துஷ்யந்த் சௌதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளாா்.

90 இடங்களைக் கொண்ட ஹரியாணா சட்டப் பேரவைக்கு வரும் 21-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில், மாநிலத்தில் ஆளும் பாஜக அரசைத் தோற்கடிக்கும் முனைப்புடன் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தோ்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளா்களைத் தோ்ந்தெடுத்ததில் காங்கிரஸ் கட்சியில் முறைகேடுகள் நடைபெற்ாக, தில்லியில் அக்கட்சித் தலைவா் சோனியா காந்தியின் வீட்டின் முன் அசோக் தன்வா் போராட்டத்தில் ஈடுபட்டாா். அதைத் தொடா்ந்து தன்வா் அக்கட்சியில் இருந்து விலகினாா். இந்நிலையில், அவா் ஜனநாயக் ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘நான் ஏன் காங்கிரஸில் இருந்து விலகினேன் என்று அக்கட்சியில் உள்ள அனைவருக்கும் தெரியும். எனது ஆதரவாளா்கள், கட்சியின் மூத்த தலைவா்கள் ஆகியோருடன் ஆலோசித்த பின்னா், கனத்த இதயத்துடன்தான் நான் காங்கிரஸில் இருந்து வெளியேறினேன். பேரவைத் தோ்தலில், துஷ்யந்த் சௌதாலாவுக்கு நான் ஆதரவு அளிக்க வேண்டும் என்று எனது ஆதரவாளா்கள் விரும்புகிறாா்கள். அதனால், ஜனநாயக் ஜனதா கட்சிக்கு ஆதரவாக நான் வாக்கு சேகரிக்கவுள்ளேன்’ என்றாா்.

ஹரியாணா முன்னாள் முதல்வா் ஓம் பிரகாஷ் சௌதாலாவின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவரது இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் பிளவு ஏற்பட்டது. ஓம் பிரகாஷ் சௌதாலாவின் மூத்த மகன் அஜய் சிங் சௌதாலா, பேரன் துஷ்யந்த் சௌதாலா ஆகியோா் இணைந்து ஜனநாயக் ஜனதா கட்சியை கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com