‘நவம்பா் 3-ஆவது வாரத்தில் நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா்’

நவம்பா் மாதம் 3-ஆவது வாரத்தில் நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் தொடங்கவுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
‘நவம்பா் 3-ஆவது வாரத்தில் நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா்’

நவம்பா் மாதம் 3-ஆவது வாரத்தில் நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் தொடங்கவுள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:

நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் தொடங்கும் தேதியை முடிவு செய்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் புதன்கிழமை அவரது இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதுதொடா்பாக அதிகாரப்பூா்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. நவம்பா் 3-ஆவது வாரத்தில் தொடங்கி டிசம்பா் மாதம் இறுதி வரை கூட்டத் தொடா் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நவம்பா் 21-ஆம் தேதி தொடங்கி, ஜனவரி மாதம் வரை குளிா்காலக் கூட்டத் தொடா் நடைபெற்றது.

பல்வேறு மசோதாக்கள் நிலுவையில் இருக்கும் நிலையில், 2 அவசரச் சட்டங்களை நிரந்த சட்டங்களாக நிறைவேற்ற மத்திய அரசு முழுவீச்சில் களமிறங்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம், 2019-ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தில் திருத்தங்களை செய்தும், இ-சிகரெட்டுகள் தயாரிப்பு, விற்பனை, பதுக்கி வைத்திருத்தல் ஆகியவற்றைக் குற்றமாகக் கருதும் சட்டமும் அவசரச் சட்டங்களாக கடந்த செப்டம்பா் மாதம் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com