பாலா? பாய்ஸனா? 41% பால் மாதிரிகள் தரச் சோதனையில் தோல்வி! அதிலும் தமிழக பாக்கெட் பாலில்.?

பச்சிளம் குழந்தை முதல் பல் போன பாட்டி வரை அடிப்படை உணவாக எடுத்துக் கொள்வது பால், தேநீர், காபி போன்றவற்றைத்தான்.
41% பால் மாதிரிகள் தரச் சோதனையில் தோல்வி!
41% பால் மாதிரிகள் தரச் சோதனையில் தோல்வி!


புது தில்லி: பச்சிளம் குழந்தை முதல் பல் போன பாட்டி வரை அடிப்படை உணவாக எடுத்துக் கொள்வது பால், தேநீர், காபி போன்றவற்றைத்தான்.

ஆனால், இந்தியாவில் முதல் முறையாக பாலின் தரத்தை அறியும் நாடு தழுவிய ஆய்வு ஒன்றை நடத்திய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், பால் மாதிரிச் சோதனையில் 41 சதவீத பால் மாதிரிகள் தோல்வி அடைந்திருப்பதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

அதாவது, பால் மாதிரிகளை சோதனை செய்த போது, 41% பால் மாதிரிகள் குறைந்தபட்ச தரத்துடன் கூட இருக்கவில்லை. அதிலும் குறிப்பாக 7% பால் மாதிரிகள் குடிக்க உகந்தவையாக இல்லாமல், குடிப்பவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு பெரும் தீங்கிழைக்கும் வகையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாலின் தரத்தை அறியும் வகையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைக் கூட விடாமல் நடத்தப்பட்ட இந்த பால் பரிசோதனை 2018ம் ஆண்டு மே மாதம் முதல் 2019ம் ஆண்டு வரை நடந்துள்ளது.

நாடு முழுவதும் இருந்து 6,432 பால் மாதிரிகள் சேகரிப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த ஆய்வில் கிடைத்திருக்கும் முக்கிய விஷயங்கள் என்னவென்றால்.. பரிசோதிக்கப்பட்ட 6,432 பால் மாதிரிகளில் 368 மாதிரிகளில் (5.7%) அஃப்லடோக்ஸின் எம்1 குறிப்பிட்ட அளவை விட மிக அதிகமாக இருந்துள்ளது.

பால் மாதிரிகளில் அஃப்லடோக்ஸின் கலந்திருப்பதை விரிவாகக் கண்டுபிடித்த முதல்ஆய்வு இதுதான். அஃப்லடோக்ஸின் எம்1 என்பது ஒரு வகையான பூஞ்சை. இது குடிக்கும் பாலில் கலந்திருக்கிறது, இதுவரை இதன் கலப்பு குறித்து எந்த ஒழுங்குமுறையும் இந்தியாவில் இல்லை. அதிலும் குறிப்பாக தில்லி, தமிழ்நாடு, கேரளாவில் விநியோகிக்கப்படும் பால் பாக்கெட்டுகளில் அதிக அளவில் அஃப்லடோக்ஸின் கலந்திருப்பதாக இந்திய உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆண்டிபயாடிக்... பரிசோதிக்கப்பட்ட 1.2 சதவீத பால் மாதிரிகளில் ஆண்டிபயாடிக் கலந்திருப்பது அடுத்த அதிர்ச்சி. இதன் அடிப்படையில் 7 சதவீத பால் மாதிரிகள் குடிக்க உகந்தவை அல்ல என்பது தெரிய வந்துள்ளது.

இதேப்போல 41% பால் மாதிரிகள் பல்வேறு தர நிர்ணயத்தில் தோல்வி அடைந்திருக்கின்றன. இதில் 77 சதவீத பால் மாதிரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஆண்டிபயாடிக் அதிகளவில் கலந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கேரளாவில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பால் மாதிரியில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்த ஆராய்ச்சியின் மூலம், பால் தர நிர்ணயத்தில் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டியது அவசியம் என்பது உணர்த்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com