கடைசி நிமிடத்தில் மாற்றம்! சோனியாவுக்கு பதிலாக ராகுல் காந்தி...

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மகேந்திரஹர்க்கில் நடைபெறும் பேரணியில் சோனியா கலந்துகொள்ள மாட்டார் என்றும் அவருக்குப் பதிலாக ராகுல் காந்தி உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கடைசி நிமிடத்தில் மாற்றம்! சோனியாவுக்கு பதிலாக ராகுல் காந்தி...

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மகேந்திரஹர்க்கில் நடைபெறும் பேரணியில் சோனியா கலந்துகொள்ள மாட்டார் என்றும் அவருக்குப் பதிலாக ராகுல் காந்தி உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற அக்டோபர் 21ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, இரு மாநிலங்களிலும் அனல் பறக்கும் பிரசாரங்கள் களை கட்டியுள்ளன. 

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் மகேந்திரஹர்க் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஒரு மாபெரும் பேரணி நடைபெறும் என்று அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பேரணியில் சோனியா காந்தி உரையாற்ற மாட்டார் என்று அக்கட்சியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவுக்  காரணமாக அவர் இந்தத் தேர்தல் பேரணியில் உரையாற்ற முடியாது என்றும் அவருக்கு பதிலாக ராகுல் காந்தி கலந்துகொண்டு உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, அவரையே தலைவராக நீட்டிக்க கட்சியின் மூத்தத் தலைவர்கள் பலர் முயற்சி செய்தும் அதற்கு எந்த பலனும் இல்லாமல் போனது. இதைத் தொடர்ந்து, கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். 

ஏறக்னவே சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக 2019 மக்களவைத் தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், இடைக்கால காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இந்தப் பேரணியில் அவர் உரையாற்றுவதாக இருந்தது. ஆனால், தற்போது கட்சியின் சார்பில், மகேந்திரஹர்க் பேரணியில் சோனியா கலந்துகொள்ள மாட்டார் என்று கூறியது கட்சியினர் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com