நவம்பர் 15க்குள் அனைத்து சாலைகளும் சரிசெய்யப்பட வேண்டும்: உ.பி முதல்வர் உத்தரவு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட வேண்டும் என்று மாநில பொதுப்பணித்துறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 
நவம்பர் 15க்குள் அனைத்து சாலைகளும் சரிசெய்யப்பட வேண்டும்: உ.பி முதல்வர் உத்தரவு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட வேண்டும் என்று மாநில பொதுப்பணித்துறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

முதல்வர் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், 'பொதுப்பணித்துறை, நகர்ப்புற மேம்பாடு மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகளில் உள்ள டெண்டர்களை உடனடியாக முடிக்க வேண்டும். வாரணாசி உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளின் தரம் சரியில்லை என்று தொடர்ச்சியாக புகார்கள் வருகின்றன.

எனவே வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட  வேண்டும். எந்த வேலையும் நடக்காத மாவட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் அதிகாரிகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம். எனவே, கிராமங்கள் உள்ளிட்ட அனைத்து சாலைகளையும் சரி செய்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார். 

மேலும், 'கோரக்பூர்-வாரணாசி, மவு- கோரக்பூர் மற்றும்மவு- வாரணாசி சாலைகளை ஆய்வு செய்து உடனடி அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். பொதுப்பணித்துறை செயலர் இந்த அனைத்துப் பணிகளையும் பார்வையிட வேண்டும். 

ஹரித்வாரில் 2021 கும்பமேளா விழாவையொட்டி, ஹரித்வார் செல்லும் சாலை நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும்' என்று.தெரிவித்துள்ளார் . 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com