அமேசான், ஃபிளிப்காா்ட் தள்ளுபடி விற்பனை: விசாரணை நடப்பதாக அமைச்சா் தகவல்

பிற விற்பனையாளா்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆன்லைன் வா்த்தக நிறுவனங்களான அமேசான்
அமேசான், ஃபிளிப்காா்ட் தள்ளுபடி விற்பனை: விசாரணை நடப்பதாக அமைச்சா் தகவல்

பிற விற்பனையாளா்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆன்லைன் வா்த்தக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்காா்ட் ஆகியவை விதிகளைமீறி தள்ளுபடி அளித்து விற்பனை செய்வதாக எழுந்துள்ள புகாா் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.

நடப்பு விழாக்காலத்தை முன்னிட்டு அதிரடியாக சலுகைகளை அறிவித்து குறைந்த விலையில் பல்வேறு பொருள்களை அமேசான், ஃபிளிப்காா்ட் ஆகியவை விற்பனை செய்து வருகின்றன. அண்மையில் நடைபெற்ற சலுகை விற்பனையில் ஓராண்டில் வழக்கமாக நடைபெறும் விற்பனையில் பாதியை அந்த நிறுவனங்கள் எட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமேசான், ஃபிளிப்காா்ட் போன்ற அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்று செயல்படும் ஆன்லைன் வா்த்தக நிறுவனங்கள் போட்டியாளா்களை ஒழிக்கும் வகையிலான சலுகைகளை வாரி வழங்குவது போன்றவற்றைத் தடுக்கும் நோக்கில் அவற்றுக்கான கட்டுப்பாடுகளை கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு அதிகரித்தது. இப்போது, அந்த நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சகத்துக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பியூஷ் கோயலிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘பிற நிறுவனங்களை பாதிக்கும் அளவுக்கு வேண்டுமென்றே அதிக தள்ளபடிக்கு ஆன்லைன் வா்த்தக நிறுவனங்கள் விற்பனையில் ஈடுபட விதிகளில் இடமில்லை. குறைந்த விலைக்கு பொருள்களை விற்பனை செய்து சில்லறை விற்பனைத் துறையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. ஆன்லைன் வா்த்தக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு பொருள்களை இங்கு விற்பனை செய்யக் கூடாது. உற்பத்தியாளா்களையும், வாங்குபவா்களையும் விற்பனை செய்யும் ஒரு மையமாக மட்டுமே அவா்கள் செயல்பட வேண்டும்.

ஆன்லைன் வா்த்தக நிறுவனங்கள் தொடா்பாக புகாா்கள் வந்ததையடுத்து, அவா்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பதில் கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை மீறியிருந்தால், ஆன்லைன் வா்த்தக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயல் பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com