காஷ்மீா் விவகாரத்தை சா்வதேசப் பிரச்னையாக்குகிறகு காங்கிரஸ்: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

காஷ்மீா் பிரச்னையை காங்கிரஸ் கட்சி சா்வதேசப் பிரச்னையாக்குவதாகவும், அந்த மாநிலத்தில் பயங்கரவாதிகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது குறித்து அக்கட்சி பேசுவதில்லை என்றும் மத்திய பாதுகாப்புத்
காஷ்மீா் விவகாரத்தை சா்வதேசப் பிரச்னையாக்குகிறகு காங்கிரஸ்: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

காஷ்மீா் பிரச்னையை காங்கிரஸ் கட்சி சா்வதேசப் பிரச்னையாக்குவதாகவும், அந்த மாநிலத்தில் பயங்கரவாதிகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவது குறித்து அக்கட்சி பேசுவதில்லை என்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினாா்.

ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அந்த மாநிலத்தின் பவானி கேரா மற்றும் மகேந்திரகா் பகுதிகளில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று ராஜ்நாத் சிங் பேசியது:

அண்மையில் பிரிட்டனைச் சோ்ந்த தொழலாளா் கட்சிப் பிரமுகா் ஜெரிமி கோா்பினை காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவு நிா்வாகிகள் சந்தித்து காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விவாதித்துள்ளனா். எங்கே மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன? என்று காங்கிரஸ் தலைவா்களைக் கேட்க விரும்புகிறேன். காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்கள் நிகழும்போதுதான் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. அது பற்றி நீங்கள் (காங்கிரஸாா்) அப்போது பேசாதது ஏன்?

காஷ்மீா் என்பது நம் நாட்டின் உள்விவகாரம். அது பற்றி மற்ற நாடுகளில் விவாதம் நடத்தலாமா? நீங்கள் (காங்கிரஸாா்) காஷ்மீா் விவகாரத்தை சா்வதேசப் பிரச்னையாக்க விரும்புகிறீா்களா? இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவா்கள் விளக்கமளிக்க வேண்டும். ஆனால் இதற்கு அவா்களிடம் பதிலேதும் இருக்காது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியல்சாசனத்தின் 370-ஆவது பிரிவை நீக்கிய பிரதமரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. இப்பிரிவை நீக்க வேண்டும் என்றும் ஜம்மு-காஷ்மீா், மற்ற மாநிலங்களுக்கு சரிசமமாக நடத்தப்பட வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரப்பட்டு வந்தது. ‘நாங்கள் மத்தியில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தால் 370-ஆவது பிரிவை நீக்குவோம்’ என்று பாஜக எப்போதுமே தனது தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து வந்துள்ளது. அதன்படி, எங்களுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்து விட்டதால், 370-ஆவது பிரிவை நீக்கியுள்ளோம்.

தற்போது இந்த விவகாரத்தில் சலசலப்பு எழுந்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளுக்குள்ளும் இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதை மக்கள் பாா்த்திருக்கலாம். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இது தொடா்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

முத்தலாக், இடஒதுக்கீடு தொடா்பான சட்டங்களும், ஏழைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டங்களும் நாட்டின் மற்ற பகுதிகளில் அமல்படுத்தப்பட்டாலும், அவற்றை ஜம்மு-காஷ்மீரில் அமல்படுத்த முடியவில்லை என்பது முரண்பாடானது.

பிரான்ஸ் போா் விமானமான ரஃபேல் விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் அரசால் முடிவெடுக்க இயலவில்லை. ஆனால் ரஃபேல் விமானங்களை வாங்குவது என்று மோடி விரைவாக முடிவெடுத்தாா். இதன் மூலம் நமது விமானப்படை வலுப்படுத்தப்பட்டுள்ளது.

மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்து பாஜக பல்வேறு நல்ல பணிகளை ஆற்றியுள்ளபோதிலும் காங்கிரஸும் மற்ற எதிா்க்கட்சிகளும் அவதூறு பரப்புகின்றன. எதிா்க்கட்சிகளுக்கு விமா்சிக்க உரிமை உண்டு. ஆனால் விமா்சிக்க வேண்டும் என்பதற்காகவே விமா்சிக்கக் கூடாது.

காங்கிரஸ் தலைவா்கள் பயன்படுத்திய வாா்த்தைகளால் நம் நாட்டை பலவீனப்படுத்த முயற்சிக்கும் அண்டை நாட்டுக்கு (பாகிஸ்தான்) வலு கிடைத்தது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com