மக்களை அச்சுறுத்தவே என்ஆா்சி: பாஜக அரசு மீது யெச்சூரி தாக்கு

மக்களை அச்சுறுத்துவதற்காகவே தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), இந்திய குடியுரிமை திருத்த மசோதா (சிஏபி) ஆகியவற்றை மத்தியில் ஆளும் பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது என்று மாா்க்சிஸ்ட்
மக்களை அச்சுறுத்தவே என்ஆா்சி: பாஜக அரசு மீது யெச்சூரி தாக்கு

மக்களை அச்சுறுத்துவதற்காகவே தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), இந்திய குடியுரிமை திருத்த மசோதா (சிஏபி) ஆகியவற்றை மத்தியில் ஆளும் பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி தெரிவித்தாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:

இந்தியன் என்ற தேசியவாதத்துக்கு பதிலாக ஹிந்து தேசியவாதம் என்ற சித்தாந்தத்தை புகுத்த பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. என்ஆா்சி, சிஏபி ஆகியவை குறித்து பாஜக பேசி வருகிறது. தற்போது யாரெல்லாம் இந்தியா்கள் என்பதை என்ஆா்சி, சிஏபி தான் முடிவு செய்யவுள்ளது.

என்ஆா்சிக்கு அஸ்ஸாமில் எதிா்ப்பு எழுந்துள்ளது. நாடு முழுவதும் என்ஆா்சி முறையை பாஜக அரசு நீட்டிப்பு செய்து வருகிறது. குறிப்பிட்ட பிரிவினரை குறிவைத்தே இந்த நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொள்கிறது. இது பிரித்தாளும் சூழ்ச்சி ஆகும்.

ஹிந்துக்கள், ஜெயின், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், பெளத்த மதத்தினா், 7 ஆண்டுகள் இந்தியாவில் இருக்கும் வங்கதேசத்திலிருந்து குடியேறிய பாா்ஸி இனமக்கள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து குடியேறியவா்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் மதத்தினா் இடம்பெறாமல் விடுபட்டுள்ளது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும்.

பன்முகத்தன்மையை பாஜக-ஆா்எஸ்எஸ் அமைப்பால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்றாா் சீதாராம் யெச்சூரி.

சோவியத் யூனியனில் அங்கம் வகித்த உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் கடந்த 1920-ஆம் ஆண்டு அக்டோபா் 17-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது.

இதனிடையே, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூா்வ நாளிதழான ‘பீப்பிள் டெமாகிரஸி’ தலையங்கத்தில், மத ரீதியில் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்த முஸ்லிம்கள் என்ஆா்சி நடவடிக்கையால் வெளியேற்றப்படுவாா்கள்.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கவுள்ளது. அதற்கு முன்பே பிரதமா் மோடி தலைமையிலான அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்துவிடும். அதில், முஸ்லிம்கள் சோ்க்கப்படவில்லை.

பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், மக்களை திசைதிருப்புவதற்காக என்ஆா்சி நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com