சர்க்கஸ் காட்டுவதை நிறுத்திவிட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துங்கள்: மத்திய அரசுக்கு பிரியங்கா வேண்டுகோள்

சர்க்கஸ் காட்டுவதை நிறுத்திவிட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ்
சர்க்கஸ் காட்டுவதை நிறுத்திவிட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துங்கள்: மத்திய அரசுக்கு பிரியங்கா வேண்டுகோள்


புதுதில்லி: சர்க்கஸ் காட்டுவதை நிறுத்திவிட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இந்திய-அமெரிக்கப் பொருளாதார நிபுணா் அபிஜித் பானா்ஜி, பிரான்ஸ் வம்சாவளி அமெரிக்கரான எஸ்தா் டஃப்லோ, அமெரிக்கப் பொருளாதார நிபுணா் மைக்கேல் கிரெமா் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, அமெரிக்காவில் தான் பணியாற்றி வரும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் (எம்ஐடி) கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அபிஜித் பானா்ஜி, இந்தியப் பொருளாதாரத்தின் இப்போதைய நிலை குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். 

அப்போது, பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது நிதிக் கொள்கைகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. இப்போதைய சூழ்நிலையில் இந்தியப் பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். முக்கியமாக ஏழை, எளிய மக்களின் கைகளில் அதிகஅளவில் பணம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்து. நாட்டில் நகா்ப்புறம், கிராமப்புறம் என இரு இடங்களிலும் பொருள்கள், சேவைகளுக்கான தேவை மிகவும் குறைந்து வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு இது மோசமான அறிகுறியாகும். இந்தியப் பொருளாதாரம் குறித்து வெளியாகும் புள்ளி விவரங்கள் குறித்து இந்தியாவில் பல்வேறு விவாதங்கள் நடக்கின்றன. பொருளாதாரத்தை குறைத்து மதிப்பீடு செய்து வெளியாகும் புள்ளி விவரங்கள் அனைத்தும் தவறானது என்று புறந்தள்ளிவிட முடியாது. பொருளாதார வீழ்ச்சியைத் தடுக்க அவசர நடவடிக்கைகள் தேவை என்று குறிப்பிட்டிருந்தார். 

இதையடுத்து, புனே நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அபிஜித் பானர்ஜி ஒரு இடதுசாரி சிந்தனையாளர் என விமர்சித்தார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்களில் ஒன்றான வறுமை ஒழிப்பு திட்டமான ‘நியாய்’ திட்டத்தை பானர்ஜி ஆதரித்ததாக கூறிய பியூஷ் கோயல், அவரது இந்த சித்தாந்தத்தை இந்திய வாக்காளர்கள் நிராகரித்து விட்டதாகவும் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ‘நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. உங்களது வேலை அதை மேம்படுத்துவதே தவிர, நகைச்சுவவை சர்க்கஸ் நடத்துவது அல்ல’ என பிரியங்கா காந்தி சாடியுள்ளார். 

அபிஜித் பானர்ஜி தனது பணியை நேர்மையாக செய்ததால் நோபல் பரிசை வென்றார். பாஜக தலைவர்கள் தங்களது வேலையைச் செய்வதற்கு பதிலாக, மற்றவர்களின் சாதனைகளை மறைப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர் எனவும் பிரியிங்கா தெரிவித்தார்.

மேலும், செப்டம்பர் மாதத்தில் வாகனத்துறையின் மந்தநிலை தொடர்ந்ததாகக் கூறும் ஒரு ஊடக அறிக்கையையும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com