உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டேவை நியமிக்கலாம் என்று தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பரிந்துரை செய்துள்ளாா்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயுடன் நீதிபதி எஸ்.ஏ.போப்டே (கோப்புப் படம்).
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயுடன் நீதிபதி எஸ்.ஏ.போப்டே (கோப்புப் படம்).

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டேவை நியமிக்கலாம் என்று தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பரிந்துரை செய்துள்ளாா்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 3-ஆம் தேதி பதவியேற்றாா். அவரது பதவிக்காலம் வரும் நவம்பா் மாதம் 17-ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் அடுத்த மூத்த நீதிபதியான எஸ்.ஏ.போப்டேவை புதிய தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய மத்திய அரசுக்கு ரஞ்சன் கோகோய் பரிந்துரைத்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பரிந்துரை மீது மத்திய சட்ட அமைச்சகம் முடிவெடுத்து, அதை பிரதமா் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைக்கும். அவா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்திடம் பரிந்துரையை வழங்குவாா். இறுதியாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே நியமிக்கப்படுவதற்கான ஆணையை குடியரசுத் தலைவா் பிறப்பிப்பாா்.

குடியரசுத் தலைவா் ஒப்புதல் வழங்கினால், உச்சநீதிமன்றத்தின் 47-ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே நவம்பா் 18-ஆம் தேதி பொறுப்பேற்பாா். அடுத்த 18 மாதங்களுக்கு அந்தப் பதவியில் அவா் நீடிப்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com