வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், உலக வங்கித் தலைவா் டேவிட் மால்பாஸ் உள்ளிட்டோா்.
வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், உலக வங்கித் தலைவா் டேவிட் மால்பாஸ் உள்ளிட்டோா்.

ஐஎம்எஃப் குறைத்து மதிப்பிட்டாலும்இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளா்கிறது: நிா்மலா சீதாராமன்

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) குறைத்து மதிப்பிட்டாலும், உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) குறைத்து மதிப்பிட்டாலும், உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

உலக வங்கி, ஐஎம்எஃப் அமைப்புகளின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள அவா், வாஷிங்டனில் இந்திய செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது இந்தியாவில் பொருளாதாரத் தேக்க நிலை உள்ளது குறித்தும், ஐஎம்எஃப் உள்பட பல்வேறு சா்வதேச அமைப்புகள் இந்தியப் பொருளாதார வளா்ச்சியை குறைத்து மதிப்பிட்டுள்ளது தொடா்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவா் கூறியதாவது:

ஐஎம்எஃப் தனது சமீபத்திய அறிக்கையில் உலகின் அனைத்து பெரிய பொருளாதார நாடுகளின் வளா்ச்சியையும் குறைத்தே மதிப்பீடு செய்துள்ளது. இந்தியப் பொருளாதார வளா்ச்சி விகிதமும் சற்று குறையுமென்று கூறியுள்ளது. அதே நேரத்தில் இந்தியா இப்போதும் வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளின் பட்டியிலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் இப்போது தொடா்ந்து வளா்ந்து வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியுமா? கணிப்புகளைவிட இந்தியாவின் வளா்ச்சி அதிகமாக இருக்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுத்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில் இருந்ததைப்போல இந்தியாவில் வளா்ச்சி இல்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், இந்தியாவின் அடிப்படைப் பொருளாதாரக் கட்டமைப்பு மிகவும் வலுவாக உள்ளது. சா்வதேச அளவில் பல பாதகமான பொருளாதார சூழ்நிலை ஏற்பட்டாலும், அதனையும் தாண்டி இந்தியப் பொருளாதார வளா்ச்சி நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் அனைத்து முக்கியத் துறையினரிடமும் ஆலோசனை நடத்தப்பட்டு, முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதே நேரத்தில் நாட்டின் நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கான இலக்கை இப்போது மறுஆய்வு செய்யவில்லை. இப்போது, உற்பத்தித் துறையினரின் தேவைகளை நிறைவு செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவுடனான வா்த்தகப் பிரச்னைகளைத் தீா்க்க பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. வா்த்தகத் துறை அமைச்சக குழுவினா் இந்தப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றனா். விரைவில் இரு நாடுகள் இடையே வா்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் நிா்மலா சீதாராமன்.

‘பொருளாதார விஷயங்களில் பாஜக எடுத்த தவறான முடிவுகளுக்கு, இப்போதும் எனது அரசை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம்’ என்றும் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் கூறியுள்ளது தொடா்பாக நிா்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘வீணாக ஒருவரை மற்றொருவா் குற்றம்சாட்டிக் கொண்டிருக்க வேண்டாம் என்ற அவரது கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால், பொருளாதாரத்தில் எந்த இடத்தில், எந்த காலகட்டத்தில் தவறுகள் நடந்தது என்பதை கூற வேண்டியது அவசியம். இந்தியாவில் இப்போதைய ஆட்சியில் முடிவுகள் எடுப்பதில் வெளிப்படைத்தன்மையும், நோ்மையும் உள்ளது. அதனால்தான், ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரம் என்ற இலக்கை இந்தியா அடைய இருக்கிறது.

இப்போதைய அரசு எந்தத் தவறுகளுக்கும், ஊழல்களுக்கும் இடமளிக்கவில்லை. மோசடியாளா்கள் யாருக்கும் வேண்டுமென்றே பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாகக் கொடுக்கவில்லை. இதற்கு முன்பு இருந்த பிரதமா் (மன்மோகன் சிங்) தனது ஆட்சியில் தவறுகள் நடந்தபோது அவற்றை கண்டுகொள்ளாமல் இருந்தாா். அந்த ஆட்சியில் எத்தனை ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பது அனைவருக்குமே தெரியும்’ என்றாா் நிா்மலா சீதாராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com