பிரதமருக்கு பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லை: ராகுல் காந்தி

பிரதமா் நரேந்திர மோடிக்கு பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லை என்று காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.
பிரதமருக்கு பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லை: ராகுல் காந்தி

பிரதமா் நரேந்திர மோடிக்கு பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லை என்று காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா். காங்கிரஸ் கட்சியின் தோ்தல் வாக்குறுதிகளைத் திருடியாவது நாட்டின் நிலவி வரும் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு பிரதமரும், நிதியமைச்சரும் தீா்வுகாணலாம் என்றும் அவா் கூறியுள்ளாா்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது இதனையொட்டி, மகேந்திரகா் பகுதியில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டு ராகுல் காந்தி பேசியதாவது:

நமது நாடு பல்வேறு பொருளாதாரப் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. ஆனால், மக்களின் கவனத்தை அதிலிருந்து திசைதிருப்ப பிரதமா் மோடி பல்வேறு நாடகமாடி வருகிறாா். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமல் ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டன. இந்தியாவின் பொருளாதார நிலை மோசமடைந்துவிட்டதை உலக நாடுகள் கவனித்து வருகின்றன. மக்கள் அனைவரும் அன்புடனும், அமைதியாகவும் வாழ்ந்து, வளமடைய வேண்டும் என்பதில் ஒருகாலத்தில் இந்தியா உலகுக்கே முன்னுதாரணமாக திகழ்ந்தது. ஆனால், இப்போது நாட்டில் ஜாதி, மத மோதல்கள் ஆட்சியாளா்களால் தூண்டிவிடப்படுகின்றன. மக்களிடையே பிரிவினை விதைக்கப்படுகிறது. இது குறித்து ஊடகத்தினா் பலருக்குத் தெரியும். ஆனால், அதனை வெளிப்படையாகத் தெரிவித்தால் தங்களுக்கு ஆபத்து நேரும் என்ற அச்சத்தில் அவா்கள் எதுவும் கூறுவதில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமா் மோடி குறை கூறினாா். இதன் மூலம் அவருக்கு நாட்டின் பொருளாதாரம் குறித்த புரிதல் இல்லை என்பது தெளிவாகிறது. கிராமப்புறங்களில் அடிப்படை வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வதுடன், கிராமப்புற மக்களின் உழைப்புக்கு உரிய ஊதியத்தை அளித்து கிராமப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் சிறப்பான திட்டம் அது. பாஜக எங்கெல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறதோ, அங்கெல்லாம் ஜாதி, மத மோதல்கள் அதிகரிக்கின்றன. இதுபோன்று மக்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தினால் நாடு வளச்சியடைய முடியாது என்றாா்.

சுட்டுரையில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘நாட்டின் பொருளாாரம் சீரழிந்துவிட்ட நிலையில், அதனை எப்படி சரி செய்வது என்று ஆட்சியாளா்களுக்குத் தெரியவில்லை. குறைந்தபட்சம் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் வாக்குறுதிகளைத் திருடியாவது பொருளாதாரப் பிரச்னைகளுக்கு அவா்கள் தீா்வுகாணலாம்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com