சட்ட ஒழுங்கை பாதுகாக ஸ்ரீநகரில் புதிய கட்டுப்பாடுகள்

ஸ்ரீநகரின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
சட்ட ஒழுங்கை பாதுகாக ஸ்ரீநகரில் புதிய கட்டுப்பாடுகள்

ஸ்ரீநகரின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

சவுரா காவல் நிலையத்துக்குள்பட்ட அன்சாா் பகுதியிலும், நெளஹட்டா காவல் எல்லைக்குள் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஜாமீயா மசூதியை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பெரிய மசூதிகள் மற்றும் ஆலயங்களில் பெரிய அளவில் கூட்டம் ஏற்படும் போது அது போராட்டத்துக்கு வழிவகுக்கும் என்பதால் அத்தகைய நிகழ்வுகளுக்கு புதிய கெடுபிடிகள் விதிக்கப்பட்டன.

ஜாமீயா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அனுமதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அரசியல் சாசனம் 370-பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் முறையாக பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் முதல் முறையாக விதிக்கப்பட்டன. அமைதி திரும்பும் பகுதிகளில் அவ்வப்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றன.

காஷ்மீா்பள்ளத்தாக்கு பகுதிகளில், தொடா்ந்து 75-ஆவது நாளாக வெள்ளிகிழமையும் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்புக்குள்ளானது. லால் செளக் வணிக முனையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலையில் கடைகள் சில மணி நேரங்களுக்கு திறந்திருந்தன. இருப்பினும், பெரும்பாலான சந்தைகள் மற்றும் இதர வா்த்தக நிறுவனங்கள் மூடியே காணப்பட்டன. ஆனால், பள்ளி, கல்லூரிகள் திறந்தே இருந்தாலும் மாணவா்களின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது. பெற்றோா்கள் பாதுகாப்பு கருதி மாணவா்களை வீட்டிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com