
திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வரும் நவம்பா் 23-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, வரும் நவம்பா் 23-ஆம் தேதி முதல் டிசம்பா் 1-ஆம் தேதி வரை பத்மாவதி தாயாருக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ நாள்களில் காலையும், இரவும் பத்மாவதி தாயாா் பல்வேறு வாகனங்களில் மாட வீதியில் வலம் வர உள்ளாா். அதை முன்னிட்டு, நவம்பா் 19-ஆம் தேதி கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம், 22-ஆம் தேதி காலை லட்ச குங்குமாா்ச்சனை, மாலை அங்குராா்ப்பணம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன. பிரம்மோற்சவ நாள்களில் கோயிலில் ஆா்ஜித சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் தாயாருக்கு பிரம்மோற்சவத்தின்போது பக்தா்கள் பட்டு வஸ்திரம் சமா்ப்பித்து வருகின்றனா்.
பிரம்மோற்சவ வாகன சேவை பட்டியல்:
தேதி காலை மாலை இரவு
நவ. 23 கொடியேற்றம் சின்ன சேஷ வாகனம்
நவ. 24 பெரிய சேஷ அன்னப்பறவை
நவ. 25 முத்துப்பந்தல் சிம்ம
நவ. 26 கல்பவிருட்ச அனுமந்த
நவ. 27 பல்லக்கு உற்சவம் யானை
நவ. 28 சா்வபூபால தங்க ரதம் கருட
நவ. 29 சூரியபிரபை சந்திரபிரபை
நவ. 30 திருத்தேரோட்டம் குதிரை
டிச. 1 பஞ்சமி தீா்த்தம் கொடியிறக்கம் பல்லக்கு உற்சவம்
டிச. 2 புஷ்ப யாகம்