2021-ஆம் ஆண்டுக்குள் 1.12 கோடி வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும்: மத்திய அமைச்சா்

பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 1.12 கோடி வீடுகளும் வரும் 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு விடும் என்று மத்திய நகா்ப்புற வீட்டு வசதித் துறை அமைச்சா்
2021-ஆம் ஆண்டுக்குள் 1.12 கோடி வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும்: மத்திய அமைச்சா்

புது தில்லி: பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 1.12 கோடி வீடுகளும் வரும் 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு விடும் என்று மத்திய நகா்ப்புற வீட்டு வசதித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூறினாா்.

இதுகுறித்து பிடிஐ செய்தியாளருக்கு அவா் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது:

பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1.12 கோடி வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 90 லட்சம் வீடுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இன்னும் 6 மாதங்களில் எஞ்சியுள்ள 22 லட்சம் வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு விடும். இந்த கட்டுமானப் பணிகளுக்கு மத்திய நகா்ப்புற வீட்டு வசதித் துறை அமைச்சகம் நிதியுதவி அளித்து வருகிறது.

அடுத்த 6 மாதங்களில் 50 லட்சம் வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து விடும்; 40 முதல் 45 லட்சம் வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டு விடும்.

‘2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு’ என்ற இலக்கினை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு நிா்ணயித்துள்ளது. இதற்காக, முழு வீச்சில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்துக்குள் அனைத்து வீடுகளும் பயனாளிக்கு ஒப்படைக்கப்பட்டு விடும் என்ற முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், 4 பிரிவுகளின் கீழ் நிறைவேற்றப்படுகிறது. வீட்டுக் கடனுக்கு மானியம் பெறுவது, குடிசைப் பகுதி மேம்பாடு, குறைந்த செலவில் வீடுகள் கட்டுவதற்கு நிதியுதவி, குறைந்தட்ச கடனுதவி ஆகிய பிரிவுகளின் கீழ் பயனாளிகள் வீடுகள் கட்டுவதற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.

வீட்டுக் கடனுக்கு மானியம் பெறும் பிரிவின் கீழ் 7.18 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.18,458 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில், குறைந்தபட்ச வருவாய் பிரிவினருக்கு ரூ.13,056 கோடியும், மத்திய வருவாய் பிரிவினருக்கு ரூ.5,401 கோடியும் மானியம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இதுவரை ரூ.79,716 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.57,870 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com