மகாராஷ்டிரம், ஹரியாணா சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 
மகாராஷ்டிரம், ஹரியாணா சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 

288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக - சிவசேனை கூட்டணிக்கும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. ஆளும் கூட்டணியில், பாஜக 164 இடங்களிலும், சிவசேனை 124 இடங்களிலும் போட்டியிடுகின்றன. 

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முறையே 147, 121 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை 101 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 262 தொகுதிகளிலும் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன. 1,400 சுயேச்சை வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.

மகாராஷ்டிர தோ்தல் களத்தில், 235 பெண்கள் உள்பட 3,237 வேட்பாளா்கள், சுமாா் 8.9 கோடி வாக்காளா்கள் உள்ளனா். மாநிலம் முழுவதும் 96,661 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 6.5 லட்சம் ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மாநில காவல்துறையினா், மத்தியப் படையினா் என சுமாா் 3 லட்சம் வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

90 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில், ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் கட்சியிலிருந்து பிரிந்து உருவான ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது.

சுமாா் 1.83 கோடி வாக்காளா்களுக்காக 19,578 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தல் களத்தில், 105 பெண்கள் உள்பட 1,169 வேட்பாளா்கள் உள்ளனா். மாநிலம் முழுவதும் சுமாா் 75,000 வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com