Enable Javscript for better performance
Pakistan has stopped postal service from India- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவுக்கு வரும் தபால் சேவையை நிறுத்துவது சர்வதேச விதிமீறல்: பாகிஸ்தானுக்கு ரவி சங்கர் பிரசாத் கண்டனம்

    By DIN  |   Published on : 21st October 2019 08:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ravisankarprasath

    மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்



    புதுதில்லி: இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் மோசமடைந்து வருகின்றன என்பதற்கான அறிகுறிகளில், இந்தியாவிற்கு வரும் தபால் சேவைகளை பாகிஸ்தான் தன்னிச்சையாக நிறுத்தியுள்ளது. இது சர்வதேச தபால் தொழிற்சங்க விதிமுறைகளுக்கு முரணானது என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி அரசியலமைப்பின் 370-வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்ப பெற்றது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. 

    இந்த சம்பவங்கள் மேற்கொள்வதற்கு முன்பே, ஜம்மு-காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இணையதள சேவை மற்றும் தகவல் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். 

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்ப பெற்றதற்கு தொடர்ந்து கடும் எதிர்ப்பையும் தெரிவித்து வரும் பாகிஸ்தானுக்கு, இது உள் விவகாரம் என இந்தியா கூரியது. இதனிடையே, போர் நெறிமுறைகளை மீறி எல்லைப்பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு நமது வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். 

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பதிலடியாக ஆகஸ்ட் 27 ஆம் தேதி பின்னர் இந்தியாவில் இருந்து எந்த தபால் சேவைகளையும் பாகிஸ்தான் ஏற்கவில்லை.

    இந்நிலையில், இந்தியாவிற்கு வரும் தபால் சேவைகளை தன்னிச்சையாக நிறுத்திய பாகிஸ்தானுக்கு மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

    இதுகுறித்து அவர் கூறுகையில்; "பாகிஸ்தானின் முடிவு நேரடியாக சர்வதேச தபால் தொழிற்சங்க விதிமுறைகளுக்கு முரணானது. ‘‘இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் மோசமடைந்து வருகின்றன என்பதற்கான அறிகுறிகளில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் பாகிஸ்தான், ஒருதலைப்பட்சமாக, இந்தியாவிற்கு வரும் தபால் சேவைகளை தன்னிச்சையாக நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த முடிவு சர்வதேச தபால் தொழிற்சங்க விதிமுறைகளுக்கு முரணானது’’ என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த இரண்டு மாதங்களாக, எந்தவொரு முன் அறிவிப்போ அல்லது தகவலோ இல்லாமல், தபால் துறையின் கடிதங்களை இந்தியாவுக்கு அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai