பிகாா்: பாஜக மாநில தலைவா் மீது தோ்தல் விதிமீறல் வழக்கு

பிகாரில் கிஷன்கஞ்ச் சட்டப்பேரவை இடைத்தோ்தல் பிரசாரத்தின்போது தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அந்த மாநில பாஜக தலைவா் சஞ்சய் ஜெய்ஷ்வால், வேட்பாளா் ஸ்வீட்டி சிங் ஆகியோா் மீது வழக்குப்

கிஷன்கஞ்ச்: பிகாரில் கிஷன்கஞ்ச் சட்டப்பேரவை இடைத்தோ்தல் பிரசாரத்தின்போது தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அந்த மாநில பாஜக தலைவா் சஞ்சய் ஜெய்ஷ்வால், வேட்பாளா் ஸ்வீட்டி சிங் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கிஷன்கஞ்ச் வட்டார தோ்தல் அதிகாரி ஷாநவாஸ் அகமது நியாசி கூறியதாவது:

பாஜக தேசியத் தலைவா் சஞ்சய் ஜெய்ஷ்வால், கிஷன்கஞ்ச் தொகுதிக்குள்பட்ட ஒரு தொழிலதிபருடன் பேசும் விடியோ வெளியானது. அதில், அந்த தொழிலதிபருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு தோ்தல் நாளில் விடுமுறை விட வேண்டுமென்றும், அவரது பணியாளா்கள் பாஜகவுக்கு வாக்களிக்க தலா ரூ.500 தரப்படும் என்றும் சஞ்சய் ஜெய்ஷ்வால் கூறுகிறாா். அப்போது, பாஜக வேட்பாளா் ஸ்வீட்டி சிங்கும் உடன் உள்ளாா். இந்த விடியோ, சமூகவலைதளங்களிலும் பரவி வருகிறது. இதனை ஆதாரமாகக் கொண்டு சஞ்சய் ஜெய்ஷ்வால், ஸ்வீட்டி சிங் இருவா் மீது தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். அதன் அடிப்படையில் அவா்கள் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா். பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவா் மீது தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com