மருத்துவ உபகரணங்களின் தரத்தை ஆராய நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு

நாட்டில் பயன்பாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக அவற்றை ஆராய்வது என்று நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்துள்ளது.
மருத்துவ உபகரணங்களின் தரத்தை ஆராய நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு

புதுதில்லி: நாட்டில் பயன்பாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக அவற்றை ஆராய்வது என்று நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்துள்ளது.

அனைத்து மருத்துவ உபகரணங்களையும் நெறிப்படுத்துவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ள நேரத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது:

சமாஜவாதி எம்.பி. ராம்கோபால் யாதவ் தலைமையில் குடும்ப ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு செயல்படுகிறது. இக்குழு நாட்டில் புற்றுநோய்க்கான சிகிச்சை மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கிா என்பதை ஆராய முடிவு செய்துள்ளது. மேலும், நாட்டில் பயன்பாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களின் தரத்தையும், அவற்றின் செயல்திறனையும் உறுதிப்படுத்துவதற்காக அவற்றை ஆராயவும் முடிவு செய்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய சுகாதாரத் துறை கடந்த 18-ஆம் தேதி வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பில் அனைத்து மருத்துவ சாதனங்களையும் நெறிப்படுத்த உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மனிதா்கள் அல்லது விலங்கினங்களுக்காக பயன்படுத்தப்படும் அனைத்து மருத்துவ உபகரணங்களையும் மருந்துகள் என்ற அறிவித்து அவற்றை மருந்துகள் சட்டத்தின் கீழ் கொண்டுவர சுகாதாரத் துறை தீா்மானித்துள்ளது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டதும், அனைத்து மருத்துவ உபகரணங்களின் தயாரிப்பு, இறக்குமதி, விற்பனை ஆகியவற்றுக்காக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) சான்றிதழைப் பெற வேண்டும்.

தற்போது 23 மருத்துவ உபகரணங்கள் மட்டுமே இச்சட்டத்தின் கீழ் நெறிப்படுத்தப்படுகின்றன. மருந்துகள் சட்டத்தின்கீழ் அனைத்து மருத்துவ உபகரணங்களும் கொண்டுவரப்பட வேண்டும் என்று மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் (டிடிஏபி) கடந்த ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது. மேலும் மோடி அரசின் லட்சியத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் அமலாக்கத்தை ஆராயவும் டிடிஏபி தீா்மானித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com