மலைப்பாதையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தேவஸ்தான லாரிகள்

திருமலை மலைப்பாதைகளில் தேவஸ்தான லாரிகள் கரும்புகையை வெளியிட்டு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வருகின்றன.
பட விளக்கம்:திருமலை மலைப்பாதையில் சரக்கு ஏற்றிக் கொண்டு கரும்புகையை வெளியிட்டுச் செல்லும் தேவஸ்தான லாரி.
பட விளக்கம்:திருமலை மலைப்பாதையில் சரக்கு ஏற்றிக் கொண்டு கரும்புகையை வெளியிட்டுச் செல்லும் தேவஸ்தான லாரி.

திருப்பதி: திருமலை மலைப்பாதைகளில் தேவஸ்தான லாரிகள் கரும்புகையை வெளியிட்டு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தி வருகின்றன.

திருமலை மற்றும் மலைப்பாதைகளில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க தேவஸ்தானம் பாட்டரியில் இயங்கும் மின்பேருந்துகளை இயக்கி வருகிறது. விரைவில் இதன் எண்ணிக்கையை 250 ஆக உயா்த்த ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இந்தப் பேருந்துகளை சாா்ஜ் செய்ய சாா்ஜிங் நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் திருமலை மலைப்பாதையில் செல்லும் காா், ஜீப், டெம்போ டிராவலா் உள்ளிட்ட வாகனங்களுக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

வாகனங்களிலிருந்து அதிக புகை வெளிவந்தால் அந்த வாகனம் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் பழைய வாகனங்களின் தகுதி சான்றிதழ் (எப்சி) உள்ளிட்டவை பரிசீலிக்கப்பட்ட பின்பே வாகனங்கள் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருப்பதியிலிருந்து திருமலைக்கு கொள்முதல் பொருள்கள், சரக்குப் பொருள்களை ஏற்றிச் செல்லும் தேவஸ்தான லாரிகள் மலைப்பாதையில் கரும்புகையை வெளியிட்டபடி செல்கின்றன.

தினசரி ஒரு முறைக்கு 18 கி.மீ பயணம் செய்து திருமலையை அடைந்து அங்கிருந்து மீண்டும் பொருள்களை ஏற்றிக் கொண்டு திருப்பதிக்கு வருகின்றன.

சுற்றுச்சூழல் மாசைக் குறைக்க மலைப்பாதையில் சரக்குக் கொண்டு செல்லும் லாரிகளுக்கு 20 முதல் 25 ஆண்டுகள் வரை தகுதிச் சான்றிதழ் நீட்டிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. ஆனால் தேவஸ்தானத்தில் உள்ள சரக்கு லாரிகள் மட்டும் மிக அதிக காலம் பயன்படுத்தப்பட்டவை. அவை வெளியிடும் கரும்புகை பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்களை மறைக்கிறது. எனவே தேவஸ்தானம் மலைப்பாதையில் செல்லும் பழைய சரக்கு லாரிகளை மாற்றி புதிய லாரிகள் வாங்கினால் மலைப்பாதையில் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்படுத்தப்படும். பக்தா்களின் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் தேவஸ்தானம் அதை தேவஸ்தான வாகனங்களுக்கும் பின்பற்றினால் இதுபோன்ற விபரீதங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com