'தமன்னா' என்ற பெயரில் மாணவர்களுக்கு திறனறி தேர்வு: சிபிஎஸ்இ அறிமுகம்

தமன்னா என்ற பெயரில் மாணவ, மாணவியருக்கு திறனறி தேர்வு ஒன்றை நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது.
'தமன்னா' என்ற பெயரில் மாணவர்களுக்கு திறனறி தேர்வு: சிபிஎஸ்இ அறிமுகம்


தமன்னா என்ற பெயரில் மாணவ, மாணவியருக்கு திறனறி தேர்வு ஒன்றை நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

12-ஆம் வகுப்பு முடிந்த பிறகு, ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கு ஏற்ற உயர்கல்வி துறையைத் தேர்வு செய்வதில் சிரமம் கொள்வதாக சிபிஎஸ்இ உணர்கிறது. மாணவர்களின் எதிர்காலம் குறித்த பிரச்னை பெற்றோரிடம் எழுகிறது.

இதனால், மாணவர்களுக்கு புதிய திறனறி தேர்வு ஒன்றை நடத்த சிபிஎஸ்இ மற்றும் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) இணைந்து முடிவு செய்தன. அந்த திறனறி தேர்வுக்கு தமன்னா என்று பெயரிடப்பட்டுள்ளது. Try And Measure Aptitude aNd Natural Abilities என்பதன் ஆங்கில சுருக்கமே தமன்னா (Tamanna) என்பதாகும்.

இந்தத் தேர்வு வாய்மொழித் திறன், மொழித்திறன் என மொத்தம் 7 தலைப்புகளில் சுமார் 70 நிமிடங்களுக்கு நடைபெறும். இதற்கென்று பிரத்யேகமாக தேர்வுப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், எந்த அளவில் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்பதற்கும் தனியாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு மாணவர்கள் தங்களது திறன் அறிந்து, அதற்கேற்ற உயர்கல்வித் துறையைத் தேர்வு செய்து கொள்ளலாம். இந்தத் தேர்வில் வெற்றி, தோல்வி என்று எதுவும் கிடையாது என்றும் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மாணவர்கள் தங்களது திறனை அறிந்துகொள்ள இந்தத் தேர்வு முறையும், இதன் மதிப்பெண்களும் கட்டாயமில்லை என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதன்மூலம், மாணவர்கள் விருப்பப்பட்டால் இந்தத் தேர்வை எழுதிகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com