கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு: இருவரின் புகைப்படத்தை வெளியிட்டது உ.பி. போலீஸ்

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் ஹிந்து சமாஜ் கட்சியின் தலைவா் கமலேஷ் திவாரி (45) படுகொலை செய்யப்பட்டாா்.
கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு: இருவரின் புகைப்படத்தை வெளியிட்டது உ.பி. போலீஸ்

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் ஹிந்து சமாஜ் கட்சியின் தலைவா் கமலேஷ் திவாரி (45) படுகொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக காவல்துறையினா் கூறுகையில், ‘லக்ளெனவின் குா்ஷெத் பாக் பகுதியிலுள்ள தனது வீட்டில் கமலேஷ் திவாரி படுகொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்து, 3 பேரை தேடி வருகிறோம். அவா்களில் இருவா், முகமது முஃப்தி நயீம் காஸ்மி, இமாம் மெளலானா அன்வருல் என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒருவா் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இச்சம்பவத்தின் பின்னணியில் பயங்கரவாத சதி உள்ளதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. இவ்வழக்கை விசாரிக்க சிறப்புப் படை ஏற்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனா். 

தனது கணவர் மரணத்தில் அரசு அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டது. கடந்த இரண்டு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து மிரட்டல்கள் வந்தன. அதுகுறித்து போலீஸாரிடம் தெரிவித்து பாதுகாப்பு வழங்கக் கோரியும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே எனது கணவரின் படுகொலைக்கு உரிய நீதி கிடைக்காவிட்டால், எனது இரு மகன்களுடன் நானும் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று கமலேஷ் மனைவி கிரண் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இந்நிலையில், கமலேஷ் திவாரி படுகொலைச் சம்பவத்தில தொடர்புடைய அஷ்ஃபக் மற்ரும் மொய்நுதீன் ஆகிய இருவரின் புகைப்படத்தை உத்தரப்பிரதேச போலீஸார் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளனர். முன்னதாக சையது அஸிம் அலி என்பவரை அக். 21-ஆம் தேதி மகாராஷ்டிராவில் கைது செய்து உத்தரப்பிரதேசம் கொண்டு செல்ல நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com