தேர்தல் கருத்துக்கணிப்பு விவாதங்களை புறக்கணித்த காங்கிரஸ் கட்சி! என்ன காரணம்?

ஹரியானா மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஊடக விவாதங்களில் கலந்துகொள்வதை காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.
Sonia Gandhi
Sonia Gandhi

ஹரியானா மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஊடக விவாதங்களில் கலந்துகொள்வதை காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.

ஹரியானா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் திங்கட்கிழமை நடைபெற்றது. வழக்கமாக தேர்தலுக்கு முன்னும், பின்னும் தனியார் ஊடகங்கள் கருத்துக்கணிப்பை நடத்தி அதுதொடர்பாக விவாதிப்பது வழக்கம்.

மேலும், பல்வேறு கட்சியின் உறுப்பினர்களுடன் தேர்தல் குறித்தும், தேர்தல் முடிவுகள் குறித்தும் ஊடகங்களில் விவாதம் நடைபெறும். அதன்படி, ஹரியானா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மற்றும் முடிவுகள் குறித்து அந்தந்த மாநிலங்களில் உள்ள ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி இந்த ஊடக விவாதங்களை முழுவதுமாக புறக்கணித்துள்ளது. தேர்தல் கருத்துக்கணிப்புகள் மற்றும் முடிவுகள் தொடர்பான விவாதங்களில் யாரும் கலந்துகொள்ளக்கூடாது என்று செய்தித் தொடர்பாளர்களுக்கு காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் தனியாக வேண்டுமானால் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கலாம்; நேர்காணல்களை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போதும் தேர்தல் குறித்த ஊடக விவாதங்களில் காங்கிரஸ் கட்சியினர் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மற்ற கட்சியினர் தொலைக்காட்சி ஊடகங்களில் கலந்துகொண்டு பல்வேறு விதமான கருத்துகளை கூறி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கமாகி வருகிறது. இதுபோன்ற விவகாரங்களில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஊடக விவாதங்களை புறக்கணிப்பதாகக் கூறப்படுகிறது. 

மக்களவைத் தேர்தலில் படு தோல்வியை சந்தித்த காங்கிரஸ் கட்சி இந்த இரண்டு மாநில சட்டபேரவைத் தேர்தலில் வெற்றி பெறுமா? என்பது நாளைய முடிவுகளில் தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com