
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும் மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், தொலைத் தொடர்புத் துறை அமைச்சர்
எண்ணெய் உற்பத்தி செய்யாத பெட்ரோலிய நிறுவனங்கள், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தற்சமயம், அரசின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும், சில தனியார் நிறுவனங்களும் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. அந்தந்த நிறுவனங்களின் சார்பில் நாடு முழுவதும் விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இந்தியாவில் ஒரு நிறுவனம், சில்லறை முறையில் எரிபொருளை விற்பனை செய்ய வேண்டுமெனில், அந்த நிறுவனம் எண்ணெய் துரப்பணப் பணிகள், உற்பத்தி, சுத்திகரிப்பு ஆகியவற்றில் ரூ.2,000 கோடி முதலீடு செய்திருக்க வேண்டும்.
இந்த நிலையில், ரூ.250 கோடி வரை விற்று முதல் ஈட்டும் எண்ணெய் உற்பத்தி செய்யாத ஒரு நிறுவனம், கிராமப்புறங்களில் விற்பனை நிலையங்களைத் திறக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், சில்லறை விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போட்டிகளை ஊக்குவிப்பதற்காக, இந்த அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சொத்துரிமை: தில்லியில் சட்டவிரோத காலனியில் வசிப்பவர்களுக்கு உரிமையாளர் என்ற அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒப்பந்தங்களுக்கு அனுமதி: முன்னதாக, பாரம்பரிய மருத்துவம், அறிவியல் தொழில்நுட்பம், ரயில் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பிற நாடுகளுடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஐடிபிபி படைகளுக்கு கூடுதலாக 3,000 வீரர்கள்: சீன எல்லையில் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக, இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு புதிதாக 3,000 வீரர்களையும், 2 கமாண்டர் நிலையிலான அதிகாரிகளையும் நியமிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.தற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.