Enable Javscript for better performance
யாசின் மாலிக் மீதான குற்றப்பத்திரிகை: தில்லி நீதிமன்றம் பரிசீலனை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு இந்தியா

    யாசின் மாலிக் மீதான குற்றப்பத்திரிகை: தில்லி நீதிமன்றம் பரிசீலனை

    By DIN  |   Published On : 24th October 2019 01:05 AM  |   Last Updated : 24th October 2019 01:05 AM  |  அ+அ அ-  |  

    yasin


    பயங்கரவாதத்துக்கு நிதியளித்தது தொடர்பாக 2017-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் உள்ளிட்டோர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றம் புதன்கிழமை பரிசீலனை செய்தது.
    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாதச் செயல்களுக்கு ஹவாலா பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத வழிகள் மூலம் நிதி திரட்டியதாக ஜேகேஎல்எஃப் அமைப்பின் தலைவர் யாசின் மாலிக் மீது கடந்த 2017-இல் தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப்பதிவு செய்தது. காஷ்மீரில் பாதுகாப்புப் படைகள் மீது கல்லெறியச் செய்தல், பள்ளிகளைத் தீவைத்து எரித்தல், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல், இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டன. இந்த வழக்கில் யாசீன் மாலிக், என்ஐஏ அதிகாரிகளால் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 
    அவர் கைது செய்யப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு ஜேகேஎல்எஃப் அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. கடந்த 1988-ஆம் ஆண்டு முதல் பல்வேறு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதற்காகவும், பிரிவினைவாதச் செயல்களை முன்னின்று நடத்தும் அமைப்பாக இருப்பதாலும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.
    இதனிடையே, பயங்கரவாதத்துக்கு நிதியளித்தது தொடர்பான வழக்கில் யாசின் மாலிக் உள்ளிட்டோர் மீது தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் என்ஐஏ அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதன் இறுதி அறிக்கையில் பிரிவினைவாதத் தலைவர்களான அசியா அந்த்ராபி, ஷபீர் ஷா, மசரத் ஆலம் பட், ஜம்மு-காஷ்மீர் எம்எல்ஏ ரஷீத் என்ஜினீயர் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. 
    இந்நிலையில், இந்தக் குற்றப்பத்திரிகையை தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராகேஷ் சயால் புதன்கிழமை பரிசீலித்தார். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிலர் பாதுகாப்புக் காரணங்களுக்காக காணொலி முறையில் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். அவர்களின் நீதிமன்றக் காவலை அடுத்த மாதம் (நவம்பர்) 7ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp