உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் நிலவரம்: 7 இடங்களில் பாஜக முன்னிலை!

உத்தரப் பிரதேச மாநில இடைத்தேர்தலில் பாஜக 7 தொகுதிகளிலும், சமாஜவாதி 2 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் தலா 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 
உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் நிலவரம்: 7 இடங்களில் பாஜக முன்னிலை!


உத்தரப் பிரதேச மாநில இடைத்தேர்தலில் பாஜக 7 தொகுதிகளிலும், சமாஜவாதி 2 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் தலா 1 தொகுதியிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலோடு மற்ற மாநிலங்களில் காலியாக இருந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளும் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.

இதன்படி, உத்தரப் பிரதேசத்தில் தற்போதைய நிலவரப்படி (11.45 மணி) பாஜக 7 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இக்லஸ், மணிக்பூர், பல்ஹா, லக்னௌ கண்ட், கோவிந்த் நகர், கோசி மற்றும் பிரதாப்கார் ஆகிய தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதில், பிரதாப்கார் தொகுதியில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அப்னா தளம் போட்டியிட்டுள்ளது.

ராம்பூர் மற்றும் ஸைத்பூர் ஆகிய தொகுதிகளில் சமாஜவாதி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. இதில், ராம்பூரி தொகுதியில் சமாஜவாதி எம்பி அஸாம் கானின் முன்னிலை, அவருக்கு தனிப்பட்ட முறையிலேயே கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் அவர் மீது 84 கிரிமினல் வழக்குகள் தொடுக்கப்பட்டது. இது அஸாம் கானுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியைப் பொறுத்தவரை தொடக்க சுற்றில் இக்லஸ் தொகுதியில் முன்னிலை வகித்து வந்தது. இதன்பிறகு, அந்த முன்னிலையை பகுஜன் சமாஜ் இழந்தது. இருந்தபோதிலும், ஜலால்பூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

இந்த இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு சற்று நம்பிக்கையளித்துள்ளது. கங்கோ தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. அதேசமயம், கோவிந்த் நகர் மற்றும் பிரதாப்கர் தொகுதியில் காங்கிரஸ் 2-வது இடத்தில் நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com