காவல் நிலையத்திலேயே மகனை சுட்டுக்கொன்ற தலைமைக் காவலர்

வாக்குவாதம் நடந்துகொண்டிருந்த சிறிது நேரத்தில் திடீரென தனது துப்பாக்கியால் மகனை சுட்டுக்கொன்றார்.
காவல் நிலையத்திலேயே மகனை சுட்டுக்கொன்ற தலைமைக் காவலர்

வாக்குவாதம் நடந்துகொண்டிருந்த சிறிது நேரத்தில் திடீரென தனது துப்பாக்கியால் மகனை சுட்டுக்கொன்றார்.

கோரக்பூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த அரவிந்த் யாதவ், தனது மகன் விகாஸ் (18) என்பவரை காவல் நிலையத்திலேயே வியாழக்கிழமை சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பாக துணை ஆய்வாளர் சுமித் சுக்லா கூறுகையில், தலைமைக் காவலர் அரவிந்த் யாதவ், சமீபத்தில் சௌரி-சௌரா காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரது முதல் மனைவியின் மகன் விகாஸ், வியாழக்கிழமை காலை சந்தித்துள்ளார். 

அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. அச்சமயம் காவலர் அரவிந்த், தன்னிடம் இருந்த போலீஸ் துப்பாக்கியைப் பயன்படுத்தி அவரது மகனை சுட்டார்.

இதில் விகாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது தலைமைக் காவலர் அரவிந்த் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com