காஷ்மீர் இன்னொரு ஆப்கானிஸ்தானாக ஆகிவிடக் கூடாது: ஐரோப்பிய யூனியன் எம்.பி.,க்கள் குழு

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழலைப் பார்வையிட சென்ற ஐரோப்பிய யூனியன் எம்.பி.,க்கள் குழு, காஷ்மீர் இன்னொரு ஆப்கானிஸ்தானாக ஆகிவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் இன்னொரு ஆப்கானிஸ்தானாக ஆகிவிடக் கூடாது: ஐரோப்பிய யூனியன் எம்.பி.,க்கள் குழு


ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழலைப் பார்வையிட சென்ற ஐரோப்பிய யூனியன் எம்.பி.,க்கள் குழு, காஷ்மீர் இன்னொரு ஆப்கானிஸ்தானாக ஆகிவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்குள்ள கள நிலவரத்தை ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 23 எம்.பி.க்கள் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய தினங்களில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் எம்.பி.,க்கள் குழு இன்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அதன் உறுப்பினர் தியரி மரியானி தெரிவிக்கையில், "நான் பல முறை இந்தியாவுக்கு வந்துள்ளேன். இந்திய அரசியலில் தலையிட நான் விரும்பவில்லை. இதன் நோக்கமே, அங்கு நிலவும் கள நிலவரம் குறித்த தகவலை அறிவதுதான். காஷ்மீர் இன்னொரு காஷ்மீராக மாறிவிடக் கூடாது" என்றார்.

பிரான்ஸைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினர் ஹென்ரி மலூஸ் கூறுகையில், "எங்களுடைய பயணம் குறித்து சில இந்திய ஊடகங்கள் தவறாக சித்தரிக்கின்றன. நாங்கள் பாசிஸ்டுகளாகவும், இஸ்லாமிய எதிர்ப்பாளர்களாகவும், இனவாதிகளாகவும் காண்பிக்கப்படுகிறோம். ஆனால், அது முற்றிலும் தவறானது. இந்தப் பிராந்தியம் துரதிருஷ்டவசமாக அச்சுறுத்தலில் இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். நேற்றுதான் 5 அப்பாவி தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து உதவிய இந்திய அரசுக்கு நன்றி. இந்தப் பயணம் முற்றிலும் தனிப்பட்ட முறையில் மேற்கொண்டதாகும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com