பாலீதீன் தடையால் அயோத்தி ராமர் கோவிலில் பிரசாதம் வழங்கல் நிறுத்தம்!

அயோத்தியில் உள்ள தற்காலிக ராமர் கோவிலில் பாலிதீன் பைகள் தடை செய்யப்பட்டதால் கடவுளுக்கு கடந்த 4 நாட்களாக பிரசாதம் கொண்டு வரமுடியவில்லை என்று பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
பாலீதீன் தடையால் அயோத்தி ராமர் கோவிலில் பிரசாதம் வழங்கல் நிறுத்தம்!

அயோத்தியில் தற்காலிக ராமர் கோவிலில் பாலிதீன் பைகள் தடை செய்யப்பட்டதால் கடந்த 4 நாட்களாக பிரசாதம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. 

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கவுள்ளது. பல ஆண்டுகளாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில்  இருந்து வரும் நிலையில், இந்த சர்ச்சைக்குரிய  நிலத்தில் தற்காலிகமாக பந்தல் அமைத்து சிறிய ராமர் கோவில் அமைத்து பக்தர்கள் வழிபட்டு  வருகின்றனர். 

அயோத்தி ராமர் கோவிலில் வெளிப்படையான பாலிதீன் பைகளில் மட்டுமே பிரசாதம் கொண்டு செல்லப்பட வேண்டும். அதிலும், தெளிவாகத் தெரிகின்ற பாலிதீன் பையில் சர்க்கரையினால் செய்யப்பட்ட சிறிய கற்கண்டுகள் மட்டுமே பிரசாதங்களாக கொண்டு செல்லப்பட வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக லட்டு போன்ற சற்று பெரிய அளவிலான பிரசாதங்கள் கோவிலினுள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

சில நேரங்களில் பிரசாதத்தில், உலர்ந்த தேங்காய் துண்டுகள் மற்றும் வேர்க்கடலை உள்ளிட்டவை சேர்த்துக்கொள்ளப்படும்.  பாதுகாப்பு காரணங்களுக்காக  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த நடைமுறை 2002 முதல் பின்பற்றப்படுகிறது.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பிளாஸ்டிக் தடை அமலில் இருந்த போதிலும், அயோத்தியில் பிளாஸ்டிக் பயன்பாடு இருப்பது அதிருப்தி அளிப்பதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இதையடுத்து, அயோத்தி ராமர் கோவிலில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டது. உடனடியாக பிரசாதத்துக்கு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் என்று உள்ளூர் கடைக்காரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. 

இதனால் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு பிரசாதம் கோவிலுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 'வெளியில் தெரியக்கூடிய பையில் மட்டுமே பிரசாதம் கொண்டு செல்லப்பட வேண்டும். பழுப்பு நிற காகித பைகளைக் கூட பயன்படுத்த முடியாது. எனவே எங்களால் பிரசாதம் கொண்டு செல்ல முடியவில்லை. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று வழியை அரசு வழங்க வேண்டும்' என்று பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக கோவிலில் கடவுளுக்கும் பிரசாதம் படைக்கப்படவில்லை; பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படவில்லை என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com