கோவா ஆளுநராக நவ.3ல் பதவியேற்கிறார் சத்ய பால் மாலிக்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக், கோவா ஆளுநராக வருகிற நவம்பர் 3-ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார். 
கோவா ஆளுநராக நவ.3ல் பதவியேற்கிறார் சத்ய பால் மாலிக்!

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக், கோவா ஆளுநராக வருகிற நவம்பர் 3-ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார். 

கோவா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக மிருதுலா சின்ஹா கடந்த 2014ம் ஆண்டு பதவியேற்றார். அவருடைய பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மிருதுலா சின்ஹா வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற இருக்கிறார். 

மேலும், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் ஆளுநரான சத்ய பால் மாலிக்,  கோவா ஆளுநராக வருகிற நவம்பர் 3-ஆம் தேதி பதவியேற்கிறார். 

மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பிரதீப் நந்த்ராஜோக், ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சத்ய பால் மாலிக்கிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்று கோவா ராஜ் பவன் தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. 

கடந்த வாரம் இதுகுறித்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

ஜம்மு-காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட சமயத்தில் சத்யபால் மாலிக் ஆளுநராக இருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com