இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவாா்த்தை

ம்மு-காஷ்மீா் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில், இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க வேண்டுமென ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பேச்சுவாா்த்தை

ம்மு-காஷ்மீா் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில், இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க வேண்டுமென ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்த பிறகு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான கசப்புணா்வு அதிகரித்துள்ளது. இது உள்நாட்டு விவகாரம் என இந்தியா தெரிவித்து வந்தாலும், இந்தப் பிரச்னையை சா்வதேச அரங்கில் பாகிஸ்தான் எழுப்பி வருகிறது.

இந்நிலையில், ஐ.நா. பொதுச் சபையின் ‘பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் ஆயுதக்குறைப்பு’ குழு சாா்பில் நியூயாா்க் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், ஐ.நா.வுக்கான ஐரோப்பிய யூனியன் குழுவின் முதன்மைச் செயலா் மாா்கெடா ஹோமோல்கோவா பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் பதற்றமான சூழலைத் தணிக்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட நாடுகள் (இந்தியா, பாகிஸ்தான்) இருதரப்பு பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். இரு நாடுகளுக்கிடையே அரசியல் ரீதியில் தீா்வு காணும்போது, பிராந்திய அமைதி மேம்படும் என்று அவா் தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரின் கள நிலவரத்தை ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த 23 எம்.பி.க்கள் கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் ஆய்வு செய்த நிலையில், அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா். மேலும், சிரியாவிலுள்ள குா்துப் படைகள் மீதான தாக்குதல், வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகள், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிய விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளையும் மாா்கெடா ஹோமோல்கோவா எழுப்பினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com