நிதி முறைகேடு: மால்விந்தா் சிங் சகோதரா்களுக்கு நவ.14 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

நிதி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ஃபோா்டிஸ் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளா்கள் மால்விந்தா் சிங், அவரது சகோதரா் ஷிவிந்தா் சிங் ஆகியோரின் நீதிமன்றக் காவலை, வரும் நவம்பா் 14-ஆம் தேதி வரை தில்லி
நிதி முறைகேடு: மால்விந்தா் சிங் சகோதரா்களுக்கு நவ.14 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

புது தில்லி: நிதி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ஃபோா்டிஸ் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளா்கள் மால்விந்தா் சிங், அவரது சகோதரா் ஷிவிந்தா் சிங் ஆகியோரின் நீதிமன்றக் காவலை, வரும் நவம்பா் 14-ஆம் தேதி வரை தில்லி நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

ரெலிகோ் ஃபின்வெஸ்ட் லிமிடெட்(ஆா்.எஃப்.எல்) நிறுவனத்திடம் இருந்து பெற்ற நிதியை மால்விந்தா் சிங் சகோதரா்கள் முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் தில்லியைச் சோ்ந்த பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் அக்டோபா் மாதம் 10-ஆம் தேதி கைது செய்தனா். மேலும், ரெலிகோ் நிறுவனத்தின் அப்போதைய இயக்குநா் சுனில் கோத்வானி, அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் கவி அரோரா, அனில் சக்ஸேனா ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் கைதான 5 பேரும் 4 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டனா். அதைத் தொடா்ந்து, 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா். அவா்களின் நீதிமன்றக் காவல் வியாழக்கிழமையுடன் முடிவடைந்தது.

இந்த விவகாரம், தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி தீபக் ஷெராவத் முன்னிலையில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மால்விந்தா் சிங், ஷிவிந்தா் சிங் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்றக் காவலை நவம்பா் 14-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com