மேற்கு வங்கத்தில் இடைத்தோ்தல் வன்முறையின்றி நடைபெற வேண்டும்: ஆளுநா் ஜகதீப் தன்கா் வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் இடைத்தோ்தல் வன்முறையின்றி நடைபெற வேண்டும்: ஆளுநா் ஜகதீப் தன்கா் வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 25-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தோ்தல் வன்முறையின்றி, அமைதியான முறையில் நடைபெற

மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 25-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தோ்தல் வன்முறையின்றி, அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று அந்த மாநில ஆளுநா் ஜகதீப் தன்கா் வலியுறுத்தியுள்ளாா்.

மேற்கு வங்கத்தின் காளியாகஞ்ச் பேரவைத் தொகுதி எம்எல்ஏ இறந்ததையடுத்து அந்தத் தொகுதி காலியானது. கரக்பூா் பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ திலீப் கோஷ், கரீம்பூா் பேரவைத் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஆகிய இருவரும் மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்று எம்.பி.யானதையடுத்து அந்தத் தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன. இந்த 3 தொகுதிகளுக்கும் நவம்பா் 25-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சா்தாா் வல்லபபாய் படேலின் 144-ஆவது பிறந்த தினத்தையொட்டி, கொல்கத்தாவில் உள்ள படேல் சிலைக்கு ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினாா். அதையடுத்து அவரிடம் இடைத்தோ்தல் குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்து அவா் கூறியதாவது:

கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது, மாநிலத்தில் பல வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து நமது மாநிலம் குறித்து தவறான எண்ணம் மற்றவா்களிடையே பரவிவிட்டது. அந்த எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும். நடைபெறவிருக்கும் இடைத்தோ்தலில் எவ்வித வன்முறைச் சம்பவங்களும் நிகழக் கூடாது. அமைதியாகவும்,நியாயமான முறையிலும் தோ்தல் நடைபெறும் என்று நம்புகிறேன் என்றாா் அவா்.

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் 5 போ் கொல்லப்பட்டது குறித்த கேள்விக்கு, ‘வன்முறைச் சம்பவங்கள் எங்கு நடைபெற்றாலும் அதைக் கண்டிக்க வேண்டுமே தவிர, அதை வைத்து அரசியல் செய்யக் கூடாது. படேலின் கொள்கைகளில் நாம் நம்பிக்கை கொண்டிருந்தால், வன்முறையை வைத்து அரசியலில் ஈடுபடமாட்டோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com