உ.பி பள்ளியில் சிறார்களுக்கு சப்பாத்தி, உப்பு: விடியோ எடுத்த பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு

உத்தரப்பிரதேசத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சப்பாத்தி, உப்பு கொடுக்கப்பட்ட விடியோவை எடுத்த பத்திரிகையாளர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 
உ.பி பள்ளியில் சிறார்களுக்கு சப்பாத்தி, உப்பு: விடியோ எடுத்த பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு

உத்தரப்பிரதேசத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சப்பாத்தி, உப்பு கொடுக்கப்பட்ட விடியோவை எடுத்த பத்திரிகையாளர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

உத்தரப்பிரதேசத்தில் மிர்ஸாபூர் மாவட்டத்தில் உள்ள அரசுத் துவக்கப் பள்ளி ஒன்றில், சிறுவர், சிறுமிகளுக்கு தினமும் தலா ஒரு சப்பாத்தியும், அதற்கு தொட்டுக் கொள்ள உப்பும் கொடுக்கப்பட்டசெய்தி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 

பள்ளி வளாகத்தில் அமர்ந்து ரொட்டியை உப்பில் தொட்டுக் கொண்டு சிறார்கள் சாப்பிடுவது குறித்து பலரும் தங்களது கருத்துகளையும், கண்டனங்களையும்  பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், பள்ளிக்குச் சென்று இந்த விடியோவை எடுத்த 'ஜன்சன்தேஷ்' என்ற என்ற பத்திரிகையில் பணிபுரியும் பவான் ஜெய்ஸ்வால் என்பவர் மீது அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

போலீசாரின் வழக்குப்பதிவில், பள்ளியில் ரொட்டி மட்டுமே தயாரிக்கப்படுவதாகவும், காய்கறிகள், பருப்பு, முட்டை உள்ளிட்டவை வெளியே தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால், பள்ளி வளாகத்தில் இருக்கும் மதிய உணவுப்பட்டியலில் பருப்பு, சாதம், ரொட்டி, காய்கறிகள் மற்றும் ஒரு சில நாட்களில் பாலும், பழமும் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பற்றி, சிறார்களின் பெற்றோர் கூறும்போது, பெரும்பாலான நாட்களில் சிறுவர்களுக்கு ரொட்டியும், உப்பும் தான் வழங்கப்படுகிறது என்றும் சில நாட்களில் சாதம் வழங்கப்பட்டாலும், அதற்கும் தொட்டுக்கொள்ள உப்பு தான் வழங்கப்படுகிறது என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.

மிர்ஸாபூர் மாஜிஸ்திரேட் அனுராக் படேல், இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருவதாகவும், அதே நேரத்தில் இது குறித்து தகவல் தெரிவிக்காத பள்ளியின் முதன்மை ஆசிரியர் மற்றும் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com