பாஜக ஆட்சி 2.0வின் நூறு நாட்கள் சாதனைப் பட்டியல் தயார்!

பாஜக ஆட்சி 2.0வின் நூறு நாட்கள் சாதனைப் பட்டியலை அக்கட்சியின் தலைமை ஜரூராகத் தயார் செய்து வருகிறது.
பாஜக ஆட்சி 2.0வின் நூறு நாட்கள் சாதனைப் பட்டியல் தயார்!


பாஜக ஆட்சி 2.0வின் நூறு நாட்கள் சாதனைப் பட்டியலை அக்கட்சியின் தலைமை ஜரூராகத் தயார் செய்து வருகிறது.

இந்த பட்டியலை செப்டம்பர் 7ம் தேதி பாஜக வெளியிட திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமா? அடுத்தடுத்த 100 நாட்களுக்கும் இதுபோன்ற பட்டியலை தொடர்ந்து வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள 100 நாட்கள் சாதனைப் பட்டியலில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது, முத்தலாக் தடைச் சட்டம் ஆகியவை முன்னிலை வகிக்கின்றன.

நூறு நாள் சாதனையை விளக்கும் வகையில் தயாரிக்கப்படும் பட்டியலை மக்களிடையே கொண்டு செல்லவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே சமயம், அனைத்துத் துறை அமைச்சர்களும், தங்களது 100 நாள் சாதனைகளை மத்திய அரசுக்கு அளித்துதவ வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதேப்போல, ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விரிவாக்கம் அல்லது மேம்பாடு குறித்தும் மத்திய அரசுக்கு தகவலை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து சாதனைகளையும் ஒருங்கிணைத்து துண்டுப் பிரசுரங்கள் போன்று வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 7ம் தேதி பாஜகவின் 100 நாள் நிறைவு விழா. அன்றைய தினம் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் நடைபெறும் சந்திரயான்-2 நிலவில் தரையிறங்கும் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் மோடி பங்கேற்க உள்ளார். 

முத்தலாக் தடைச் சட்டம், 370 சட்டப்பிரிவு நீக்கம், பொருளாதாரத்தை மேம்படுத்த எடுத்திருக்கும் நடவடிக்கைகள் போன்றவை அடுத்து வரும் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஹரியாணா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com