சென்னையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டது: ஒரு சவரன் ரூ.28,832க்கு விற்பனை

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.216 அதிகரித்து ரூ.29,832க்கு விற்பனையானது.
சென்னையில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டது: ஒரு சவரன் ரூ.28,832க்கு விற்பனை


சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.216 அதிகரித்து ரூ.29,832க்கு விற்பனையானது.

தொட்டு விடும் தூரத்தில் என்பது போல் தங்கம் விலை ரூ.30 ஆயிரத்தைத் தொட்டு விடும் தூரத்தில் துரத்திக் கொண்டு ஓடுகிறது.

நேற்று நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.88 உயர்ந்து, ரூ.29,616-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ரூ.29,832க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி தங்கம் பவுனுக்கு ரூ.29 ஆயிரத்தைத் தாண்டி, நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. அதன்பிறகு, விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. 

ஒரு கிராம் தங்கம் ரூ.28 உயர்ந்து, ரூ.3,729-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 60 பைசா உயர்ந்து ரூ.52.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.52,600 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் - ரூ.3,729
1 பவுன்  தங்கம்  -  ரூ.29,823
1 கிராம் வெள்ளி  -  52.60
1 கிலோ வெள்ளி  - 52,600
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com