நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது: சுப்ரமணிய சுவாமி கருத்து

நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் அளவு 5 சதவீதமாக குறைந்துள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த காலாண்டைவிட 0.8 சதவிதம் உள்நாட்டு உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. 
நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது: சுப்ரமணிய சுவாமி கருத்து

நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் அளவு 5 சதவீதமாக குறைந்துள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த காலாண்டைவிட 0.8 சதவிதம் உள்நாட்டு உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. 

கடந்த வருடம் இதே காலாண்டில் உள்நாட்டு உற்பத்தியின் அளவு 7.8 சதவீதமாக இருந்துள்ளது. மத்திய நடவடிக்கைகளின் காரணமாகவே பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. ‘பொருளாதரத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று முன்னாள் பிரதமரும் பொருளாதர வல்லுநருமான மன்மோகன்சிங் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணியன் சுவாமி, ‘ப.சிதம்பரம் ஏராளமான ஊழல் செய்துள்ளார். அவர் மீது 7 வழக்குகள் உள்ளன. அவருக்கு, 20 வருடம் சிறை தண்டனை கிடைக்கும். ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட உள்ளனர். விரைவில் திகார் ஜெயலில் காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தலாம். பொருளாதார மந்த நிலைக்கு பாதி காரணம் காங்கிரஸ் அரசு.

மன்மோகன் சிங் ஆட்சியின்போது, அவர் கைகூலியாக இருந்தார். காங்கிரஸ் செய்த அதிக ஊழல் தான் பொருளாதார மந்த நிலைக்கு ஒரு காரணம். அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது.

நரேந்திர மோடி ஒரு வீரர். பல நல்ல செயல்களை செய்துள்ளார். பொருளாதாரத்தில் நல்ல கொள்கை இருக்க வேண்டும். பா.ஜ.க அரசில் இதுவரை பொருளாதார மேதைகள் நிதியமைச்சராக இருந்ததில்லை.

இந்தியாவில் விவசாயிகளுக்கு சலுகைகள் அறிவிக்க வேண்டும். தேவையான திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை. அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது. அவரால் தற்போதைய பொருளாதார தேக்கநிலையை சரி செய்ய முடியாது’ என்று விமர்சனம் செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com