சுடச்சுட

  

  ஹெல்மெட் இல்லாம மாட்டிக்கிட்டா என்ன செய்வது? வைரலாகும் வீடியோ!

  By Muthumari  |   Published on : 05th September 2019 01:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  helmet

   

  திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, போக்குவரத்து விதிமுறைகளை மீறினால், விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் போது ஹெல்மெட் அணியவில்லை என்றால் ரூ.1,000, ஓட்டுநர் உரிமம் இல்லை என்றால் ரூ.5,000 என்பது போன்று அபராதக் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன. 

  டெல்லியில் ஒருவர் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆவணங்கள் எதுவும் இல்லை என்ற காரணத்தால் ரூ.23,000 அபராதம் செலுத்திய செய்திகள் வெளியாகின. தொடர்ந்து பல்வேறு இடங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. 

  இந்த நிலையில், ஹெல்மெட் இல்லையென்றால் என்ன செய்வது? என டேக் செய்து ஒரு விடியோ சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது. அந்த விடியோவில், ஹெல்மெட் இல்லை என்பதால் வாகன ஓட்டிகள், பைக்கில் இருந்து இறங்கி வாகனத்தை உருட்டிச் செல்கின்றனர்.

  இதனை ஹரியானா மாநில ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன், 'ரசிக்கும்படியாக இருக்கிறது. போக்குவரத்துத் துறை அபராதத்தில் இருந்து தப்பிக்க புதுமையான வழி... இம்மாதிரியான சூழ்நிலைகளை தவிர்க்க போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுங்கள்' என்று பதிவிட்டுள்ளார். 

  இந்த விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, நெட்டிசன்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

  இது காமெடிக்காக உருவாக்கப்பட்ட விடியோவாக இருக்கலாம். எனவே போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி அபராதம் செலுத்துவதைத் தவிருங்கள். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai