இஸ்ரோவைப் பற்றி நாடே பெருமிதம் கொள்கிறது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம்

ந்திரயான்- 2 திட்டத்தின் மூலம் இஸ்ரோ தனது தைரியத்தையும், முன்மாதிரியான அர்ப்பணிப்பையும் காட்டியுள்ளது.
இஸ்ரோவைப் பற்றி நாடே பெருமிதம் கொள்கிறது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பெருமிதம்


புதுதில்லி: நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம், நிலவில் தரையிறங்க 2.1 கி.மீ., தூரம் இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இந்த நிகழ்வை இஸ்ரோ மையத்தில் இருந்து நேரடியாக பார்வையிட்ட பிரதமர் மோடி,  இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் என கூறிச் சென்றார்.

இந்நிலையில் 'லேண்டர்' சிக்னல் துண்டிக்கப்பட்டது குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்க பதிவில், சந்திரயான்- 2 திட்டத்தின் மூலம் இஸ்ரோ தனது தைரியத்தையும், முன்மாதிரியான அர்ப்பணிப்பையும் காட்டியுள்ளது. இஸ்ரோவைப் பற்றி நாடே பெருமிதம் கொள்கிறது என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com