லேண்டருடனான தொடர்பை இழந்தாலும் 130 கோடி இந்தியர்களின் நம்பிக்கையை இழக்கவில்லை: அழகாகச் சொன்னவர்?

நம்பிக்கையிழக்க ஒன்றுமே இல்லை என்று குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, சந்திரயான்-2 திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
லேண்டருடனான தொடர்பை இழந்தாலும் 130 கோடி இந்தியர்களின் நம்பிக்கையை இழக்கவில்லை: அழகாகச் சொன்னவர்?

புது தில்லி: நம்பிக்கையிழக்க ஒன்றுமே இல்லை என்று குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, சந்திரயான்-2 திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் - 2 திட்டத்தின் கீழ் நிலவில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டருடனான தொடர்பு கடைசி நேரத்தில் கிடைக்காமல் போனது. 

ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளின் ஆக்கப்பூர்வமான பணி, உரிய இலக்கை எட்டாமல் போனதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மனம் உடைந்து போயினர்.

இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டு மக்களும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கை தரும் வகையில் தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறுகையில், நம்பிக்கையிழக்க ஒன்றுமே இல்லை. லேண்டருடனான தொடர்பைத்தான் இஸ்ரோ இழந்துள்ளதேத் தவிர, 130 கோடி இந்தியர்களின் நம்பிக்கையை இழக்கவில்லை என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சந்திரயான்-2 திட்டத்துக்காக பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் பணியாற்றிய அனைவருக்கும் அவர்களது கடினமான பணிக்கும், அர்ப்பணிப்புக்கும் எனது சல்யூட். விண்வெளியில் ஒரு புதிய விஷயத்தை ஆய்வு செய்ய முயன்ற இஸ்ரோ விஞ்ஞானிகளின் பெரும் முயற்சிக்கும் வாழ்த்து என்றும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவின் எதிர்கால வெற்றிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும், நாடே இஸ்ரோ விஞ்ஞானிகளுக்காகப் பெருமைப்படுவதாகவும் வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com