பிரதமர் மோடியின் நம்பிக்கை பேச்சைக் கேட்டு கண்ணீர் விட்ட பெண் விஞ்ஞானிகள்!

உங்களின் கனவுகளும், திட்டங்களும் என்னை விடவும் வலிமையானவை. உங்களை சந்தித்து உரையாற்ற வந்தேன். ஆனால்
பிரதமர் மோடியின் நம்பிக்கை பேச்சைக் கேட்டு கண்ணீர் விட்ட பெண் விஞ்ஞானிகள்!


பெங்களூரு: உங்களின் கனவுகளும், திட்டங்களும் என்னை விடவும் வலிமையானவை. உங்களை சந்தித்து உரையாற்ற வந்தேன். ஆனால் உங்களிடம் இருந்து ஊக்கத்தை பெற்றுக் கொண்டேன் என விஞ்ஞானிகளிடம் மோடியின் உரையை கேட்ட பெண் விஞ்ஞானிகள் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர்.

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க 2.1 கி.மீ., தூரம் இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இந்த நிகழ்வை பிரதமர் மோடி, இஸ்ரோ மையத்தில் இருந்து நேரடியாக பார்வையிட்டார்.

விக்ரம் லேண்டர் உடனான தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சந்திரயான் 2 விண்கலத்துடனான தொடர்பு 5 சதவீதம் மட்டுமே இழந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் என கூறிச் சென்ற பிரதமர் மோடி, மீண்டும் காலை 8 மணியளவில் இஸ்ரோ மையத்திற்கு வந்த மோடியை இஸ்ரோ தலைவர் சிவன், கஸ்தூரிரங்கன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வரவேற்றனர்.

பின்னர் இஸ்ரோவின் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில், பேச்சின் தொடக்கத்தில் இருந்து விஞ்ஞானிகளை பாராட்டியும், நம்பிக்கையான வார்த்தைகளை கூறியே பேசினார். 

அதாவது, இன்று நாம் கற்றுக் கொண்ட பாடம் நமது எதிர்கால பயணங்களை உறுதி செய்யும் எப்போதும் தோல்வியை ஒப்புக் கொள்ளாத வெற்றிப் பயணம் இது. உங்களை எண்ணி நாடே பெருமைப்படுகிறது. நான் உங்களுடன் இருப்பேன். நாடும் உங்களுக்கு துணையாக இருக்கும். எந்த ஒரு இடையூறும் சங்கடமும் நமக்கு புதிதாக ஒன்றை கற்றுக் கொடுக்கிறது.

சந்திரயான் 2 பயணத்தின் இறுதி கட்டம் நமக்கு வேதனையை கொடுத்திருக்கலாம். ஆனாலும் அதன் பயணம் நமக்கு பெருமிதத்தை கொடுத்துள்ளது. இப்போதும் கூட நமது ஆர்பிட்டர் சந்திரனை சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது. எந்த வித தடையும் நிராசையும் தேவையில்லை. முன்னேற வழி காண்போம். இனி வரும் திட்டங்களுக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். 

விஞ்ஞானத்தின் அடிப்படையே முயற்சி, முயற்சி மேலும் முயற்சிதான். உங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உங்கள் எண்ணங்களை நான் அறிவேன். உங்களிடமிருந்து உறுதியைப் பெற்றுக் கொள்வதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன். இத்தனை திறன் வாய்ந்த விஞ்ஞானிகளுக்கு நல்வாழ்த்துகள் என்று கூறினார். 

மோடியின் உரையை கேட்ட பெண் விஞ்ஞானிகள் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர்.

உரையை நிறைவு செய்து புறப்பட்ட மோடி, "உங்களின் கனவுகளும், திட்டங்களும் என்னை விடவும் வலிமையானவை. உங்களை சந்தித்து உரையாற்ற வந்தேன். ஆனால் உங்களிடம் இருந்து ஊக்கத்தை பெற்றுக் கொண்டேன்" என விஞ்ஞானிகளிடம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com