சந்திரயான்-2 பின்னடைவை கொண்டாடிய பாகிஸ்தான்; வறுத்தெடுத்த இந்தியர்களின் டிவீட்கள் இதோ!

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முயற்சியில் இந்தியாவின் சந்திராயான்-2 திட்டம் பின்னடைவை சந்தித்தது. இதனால் ஒட்டுமொத்த இந்தியர்களும் கவலை அடைந்தனர்.
சந்திரயான்-2 பின்னடைவை கொண்டாடிய பாகிஸ்தான்; வறுத்தெடுத்த இந்தியர்களின் டிவீட்கள் இதோ!


புது தில்லி: நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முயற்சியில் இந்தியாவின் சந்திராயான்-2 திட்டம் பின்னடைவை சந்தித்தது. இதனால் ஒட்டுமொத்த இந்தியர்களும் கவலை அடைந்தனர்.

ஆனால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சாதனை நிகழ்வு பின்னடைவை சந்தித்தது குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த டிவிட்டர் பயனாளர்கள் கிண்டலடித்தும், நக்கலாகவும் டிவிட்டரில் கருத்துகளை பதிவு செய்தனர். #indiafailed என்ற ஹேஷ் டேக்குகளையும் அதிகளவில் பதிவு செய்தனர்.

இந்தியாவின் ஒரு பின்னடைவை அண்டை நாடான பாகிஸ்தான் கொண்டாடும் விதமாக அந்நாட்டு மக்கள் நடந்து கொண்ட விதம் அவர்களது இயல்பையேக் காட்டுவதாக அமைந்திருந்தது.

அதே சமயம், இந்தியர்களும் சும்மா விடவில்லை, பாகிஸ்தானியர்களை டிவிட்டரில் வறுத்தெடுத்தனர். அதோடு, #proudofISRO, #worthlesspakistan போன்ற ஹேஷ்டேக்குகளை பதிவிட்டனர்.

"சந்திரயான் திட்டம் குறித்து பாகிஸ்தான் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், அதன் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட, இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டநிதி அதிகம். இதுபோன்று 100 சந்திரயான்களை இந்தியாவால் செலுத்த முடியும்3" என்று ஒருவர் டிவீட் செய்திருந்தார்.

"மற்றொரு பதிவில், இந்தியா தோற்கவில்லை, லேண்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது." அவ்வளவுதான் என்று பதிவிட்டுள்ளார்.

"சில முயற்சிகளில் நாசா கூட தோற்றிருக்கிறது. தோல்வி என்பது வெற்றிக்கான முதல் படியேதான். இந்தியா தோற்றிருக்கிறது என்றால் அது வெற்றிக்குத் தயாராகிவிட்டது என்று அர்த்தம். ஒரே ஒரு தோல்வியை வைத்து இஸ்ரோவை மதிப்பிட முடியாது" என்று ஒரு இந்தியர் டிவீட் செய்துள்ளார்.

"டியர் பாகிஸ்தானிஸ், இது எங்கள் தோல்வியல்ல, யாருமே நுழைய முடியாத ஒரு இடத்துக்குள் நாங்கள் நுழைந்திருப்பதே முதல் வெற்றி, ஒட்டுமொத்த தோல்வியல்ல, தற்போது வெற்றி எங்களுக்கு சற்று தொலைவில் சென்றுள்ளது. அவ்வளவே, முதலில் நமது நிலையை எண்ணிப் பார்த்து பிறகுதான் மற்றவர்களை விமரிசிக்க வேண்டும்" என்று மிக அழுத்தமாக தனது கருத்தினை பதிவு செய்துள்ளார் மற்றொரு பிரஜை.

கடைசியாக, ஒருவர் நெற்றியடி அடித்துள்ளார். அதாவது, "சந்திரயான்-2 பின்னடைவுதான். அப்படியே இருந்தாலும் இதன் மூலம் எங்கள் இளைஞர்கள்  விஞ்ஞானியாக வேண்டும் என்பதை இதன் மூலம் மனதுக்குள் நினைத்திருப்பார்கள், உங்களைப் போல தற்கொலைப் படையினராக வேண்டும் என்றல்ல" என்று காட்டமாகவேப் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com