இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு வீண்போகவில்லை: ராகுல்காந்தி

சந்திராயன்-2 திட்டம் நிறைவேற பாடுபட்ட இஸ்ரோவிற்கும் அதன் குழுவினருக்கும் வாழ்த்துகள். உங்களின் ஆர்வமும், அர்ப்பணிப்பும் ஒவ்வொரு
இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு வீண்போகவில்லை: ராகுல்காந்தி


புதுதில்லி: சந்திரயான் - 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று சனிக்கழமை அதிகாலை 2:15 மணி அளவில், தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலிருந்து, 'சிக்னல்' துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர், சிவன் அறிவித்தார். 

முன்னதாக பிரதமர் மோடி இஸ்ரோ தலைவர் சிவன் தோளை தட்டிக்கொடுத்து நம்பிக்கை இழக்க வேண்டாம். தைரியமாக இருங்கள் நம்பிக்கையூட்டி சென்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்க பதிவில், சந்திராயன்-2 திட்டம் நிறைவேற பாடுபட்ட இஸ்ரோவிற்கும் அதன் குழுவினருக்கும் வாழ்த்துகள். உங்களின் ஆர்வமும், அர்ப்பணிப்பும் ஒவ்வொரு இந்தியனுக்கும் உத்வேகம் அளித்துள்ளது. உங்களின் உழைப்பு என்றுமே வீண் போகாது. இது இன்னும் பல பாதைகளை காட்டும் என்றும் என்றும், இந்திய விஞ்ஞானிகளின் இந்த முயற்சி இந்திய விண்வெளி பயணங்களில் பல்வேறு புதிய சாதனைகளை படைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் ராகுல்காந்தி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com