கார்த்தி சிதம்பரம் செலுத்திய ரூ.10 கோடியை விடுவிக்க மறுப்பு

வெளிநாடு செல்வதற்காக, உச்சநீதிமன்றத்திடம் கார்த்தி சிதம்பரம் செலுத்திய ரூ.10 கோடி வைப்புத் தொகையை மேலும் 3 மாதங்களுக்கு விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
கார்த்தி சிதம்பரம் செலுத்திய ரூ.10 கோடியை விடுவிக்க மறுப்பு

வெளிநாடு செல்வதற்காக, உச்சநீதிமன்றத்திடம் கார்த்தி சிதம்பரம் செலுத்திய ரூ.10 கோடி வைப்புத் தொகையை மேலும் 3 மாதங்களுக்கு விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு ஆகிய வழக்குகளை எதிர்கொண்டு வரும் கார்த்தி சிதம்பரம், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ரூ.10 கோடி வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடந்த மே மாதம் அனுமதி வழங்கியது. அதன்படி, உச்சநீதிமன்ற பதிவாளரிடம் அவர் வைப்புத் தொகையை செலுத்தினார். 
இதனிடையே, வைப்புத் தொகையை திருப்பி ஒப்படைக்கக் கோரி, அவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்தது. ரூ.10 கோடி தொகையை, கடன் வாங்கியே தாம் செலுத்தியிருந்ததாகவும், அந்த தொகைக்கான வட்டியை செலுத்தி வருவதாகவும் அவர் முன்வைத்த வாதங்களை நீதிமன்றம் ஏற்கவில்லை.
இந்நிலையில், ரூ.10 கோடியை திருப்பி ஒப்படைக்கக் கோரி, அவர் புதிதாக தாக்கல் செய்த மனு மீது நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, அந்த தொகையை மேலும் 3 மாதங்களுக்கு விடுவிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.
முன்னதாக, கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் அளித்த சுதந்திரத்தை அவர் தவறாகப் பயன்படுத்துகிறார். விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கில், அவர் அடிக்கடி வெளிநாடு செல்கிறார். கடந்த 6 மாதங்களில், 51 நாள்கள் அவர் வெளிநாடுகளில் இருந்துள்ளார் என்று அமலாக்கத் துறை குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com